(246)

(246)

காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோ டல்பூச்

சூடிவ ருகின்ற தாமோ தராகற்றுத் தூளிகாண் உன்னு டம்பு

பேடை மயிற்சாயல் பின்னை மணாளா நீராட் டமைத்து வைத்தேன்

ஆடி அமுதுசெய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்.

பதவுரை

காடுகள் ஊடு போய்

(பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து
(கன்றுகள் கைகழியப் போகாதபடி)

மறி ஓடி

(அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி
கன்றுகள் மேய்த்து

(அக்) கன்றுகளை மேய்த்து
சார் கோடல் பூ சூடி

பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்துகொண்டு
வருகின்ற

(மீண்டு) வருகின்ற
தாமோதர்

கண்ணபிரானே!
உன் உடம்பு

உன் உடம்பானது
கன்று தூளி காண்

கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப்பெற்றுள்ளதுகாண்;
மயில் பேடை

பெண்மயில் போன்ற
சாயல்

சாயலையுடைய
பின்னை

நப்பின்னைப்பிராட்டிக்கு
மாணாளா

வல்லபனானவனே!

(இந்த உடம்பை அலம்புவதற்காக)

நீராட்டு அமைத்து வைத்தேன்

நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்;

(ஆகையால் நீ)

ஆடி

நீராடி
அமுதுசெய்

அமுதுசெய்வாயாக;
உன்னோடு உடனே

உன்னோடு கூடவே
உண்பான்

உண்ணவேணுமென்று
அப்பனும்

(உன்) தகப்பனாரும்
உண்டிலன்

(இதுவரை) உண்ணவில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானே! நீ கன்று மேய்க்கக் காட்டிடைப் புகுந்து மேய்க்கும்போது அவை அங்குமிங்கும் சிதறி ஓட, அப்படி அவ்ற்றை ஓட விடாமல் அவற்றின் முன்னே ஓடித் திருப்பி இவ்வாறு கஷ்டங்கள் பட்டுக் கன்றுகளை மேய்த்துவிட்டு வரும்போது உன் உடம்பெல்லாம் புழுதி படிந்து கிடக்கின்றது; இந்த மாசு தீரும்படி உன்னை நீராட்டுவதற்காக எண்ணெய் புளிப்பழம் முதலிய ஸாமக்ரிகளச் சேமித்துவைத்திருக்கின்றேன்; நீ வந்த பிறகு உன்னுடனே உண்ணவேணுமென்று உன் தகப்பனாரும் இதுவரை உண்ணாமல் காத்திருக்கின்றார்; ஆகையால் சடக்கென நீராடி அமுது செய்யவா என்றழைக்கின்றாள். கோடல் பூ-காந்தள் பூ; கார்-பெருமைக்கும் பேர்.

English Translation

O Damodara! Entering the deep forest, driving the calves and running before them, you return wearing dark glory-lily flowers. See, your body is covered with the dust raised by the calves. O Bridegroom of Nappinnai who charms you like a peacock female! I have made ready for your bath, Bathe and come for supper. Your father has not eaten, he wants to eat with you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top