(244)

(244)

சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ

கோலப் பணைக்கச் சும்கூ றையுடையும் குளிர்முத் தின்கோ டாலமும்

காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்

ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோமற் றாரு மில்லை.

பதவுரை

நங்கைமீர்

பெண்காள்!,
ஒரு காது

ஒரு காதிலே
சீலைக்குதம்பை

சீலைத்தக்கையையும்
ஒரு காது

மற்றொரு காதிலே
செம் நிறம் மேல்தோன்றிப் பூ

செங்காந்தள் பூவையும் (அணிந்துகொண்டு)
கூறை உடையும்

திருப்பரியட்டத்தின் உடுப்பையும்

(அது நழுவாமைக்குச் சாத்தின)

கோலம்

அழகிய
பணை

பெரிய
கச்சும்

கச்சுப்பட்டையையும்
குளிர்

குளிர்ந்திராநின்றுள்ள
முத்தின்

முத்தாலேதொடுக்கப்பெற்று
கோடு

(பிறைபோல்)வளைந்திருக்கின்ற
ஆலமும்

ஹாரத்தையும்

(உடையனாய்க் கொண்டு)

காலி பின்னே

கன்றுகளின் பின்னே
வருகின்ற

(மீண்டு)வாராநின்ற
கடல் வண்ணன்

கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய
வேடத்தை

வேஷத்தை
வந்து காணீர்

வந்து பாருங்கள்;
ஞாலத்து

பூமண்டலத்திலே
புத்திரனை

பிள்ளையை
பெற்றார்

பெற்றவர்களுள்

(’நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத்தக்கவள்)

நானே

நான் ஒருத்தியேயாவேன்;
மற்று ஆரும் இல்லை

வேறொருத்தியுமில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சீலைக்குதம்பை= ‘போய்ப்பாடுடைய நின்’’ என்ர திருமொழியில் யசோதைப்பிராட்டி கண்ணபிரானை வேண்டியழைத்துக் காதிலிட்ட துணித்திரி. “திரியை யெரியாமே காதுக்கிடுவன்” என்று சொல்லி இட்டாளன்றோ.-இரண்டு காதுகளிலும் அத்திரியை இவள் இட்டனுப்ப, அவன் காட்டிலே ஒருகாதில் திரியைக் களைந்திட்டுச் செங்காந்தள்பூவை அணிந்து கொண்டுவந்தமை அறிக. உடை என்று வஸ்திரத்திற்கும் அதனை உடுத்துதற்கும்பேர். இங்கு இரண்டாவதான தொழிற்பெயரைக் கொள்க. ஆலம்-’ஹாரம்’ என்ற வடசொல் ஆரமெனத் திரிந்து ரகரத்திற்கும் லகரம் போலியாக வந்தது: அன்றிக்கே, ‘கோடாரமும்’ என்றே பாடமாகவுமாம்; அன்றிக்கே, ‘கோடாலம்’ என்றொரு முழுசொல்லாய் முத்துப்பணியைச் சொல்லிற்றாகவுமாமென்பர்-திருவாய்மொழிப்பிள்ளை. வேடம்-வேஷம். பெண்காள்! கச்சுங் கூறையுமாரமுமாக என் கண்ணபிரான் கன்றுமேய்த்து மீண்டு வருகின்ற கோலத்தை வந்து காண்மின்; பிள்ளை என்றால் இவனொருத்தனேயொழிய மற்றைப்பிள்ளைகள் அணிற்பிள்ளை கீரிப்பிள்ளை தென்னம்பிள்ளையேயாமத்தனை; அவற்றைப்பெற்ற தாய்களோடு மலடிகளோடு ஒருவாசியில்லை; ‘புத்ரவதீ’ என்று எனக் கொருத்திக்கே யன்றோ பட்டங்கட்டத்தகும் என்று புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாள்.

English Translation

With the tucks of his turban covering one ear and a bunch of red glory-lily flowers stuck over the other, wearing a beautiful vesture and a waist cloth over it, hanging a crescent of cool pearls on his chest, the ocean-hued Lord returns with the calves. O Ladies, come

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top