(243)

(243)

என்றும் எனக்குஇனி யானை என்மணி வண்ணனை

கன்றின் பின்போக்கி னேனென்று அசோதை கழறிய

பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன்சொல்

இன்தமிழ் மாலைகள் வல்ல வர்க்குஇட ரில்லையே.

பதவுரை

என்றும்

–

‘எப்போதும்
எனக்கு

–

(தாயாகிய) எனக்கு
இனியானை

–

இனிமையைத் தருமவனாய்
என்

–

என்னுடைய
மணிவண்ணனை

–

நீலமணிபோன்ற வடிவையுடையனான கண்ணபிரானை
கன்றி, பின் போக்கினேன் என்று

–

கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று
அசோதை

–

யசோதைப்பிராட்டி
கழறிய

–

(மனம்நொந்து) சொன்னவற்றவை
சொல்

–

அருளிச் செய்த
பொன்

–

பொன்மயமாய்
திகழ்

–

விளங்காநின்றுள்ள
மாடம்

–

மாடங்களையுடைய
புதுவையர்

–

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு
கோன்

–

நிர்வாஹகரான
பட்டன்

–

பெரியாழ்வாருடைய
இன்

–

போக்யமான
தமிழ் மாலைகள்

–

தமிழ்ச்சொல் மாலைகளை
வல்லவர்க்கு

–

ஓதவல்லவர்களுக்கு
இடர் இல்லை

–

(ஒருகாலும்) துன்பமில்லையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்றும்-தீம்புசெய்த காலத்திலுமென்க: ‘கழறிய’ என்பதைப் பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயராகக்கொண்டு அதில் இரண்டாம்வேற்றுமையுருபு தொக்கியிருக்கின்ற தென்க.

English Translation

This decad of sweet songs by gold-mansioned Puduvai King Pattarbiran recalls Yasoda’s lament on sending her ever-sweet gem-hued Lord after the grazing calves. Those who master it will have no hardships.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top