(198)
கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த
பிள்ளை யரசேநீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்.
பதவுரை
| கள்ளம் |
– |
வஞ்சனையுடைய |
| சகடும் |
– |
சகடாஸுரனையும் |
| மருதும் |
– |
யமளார்ஜுநங்களையும் |
| கலக்கு அழிய |
– |
(வடிவம்) கட்டுக்குலைந்தழியும்படி |
| உதை செய்த |
– |
(திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய |
| பிள்ளை அரசே |
– |
பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே! |
| நீ |
– |
நீ |
| பேயை |
– |
பூதனையினுடைய |
| முலைபிடித்து உண்ட பின்னை |
– |
முலையைப் பிடித்து (வாய்வைத்து) உண்டபின்பு |
| உள்ள ஆறு |
– |
உள்ளபடி |
| ஒன்றும் அறியேன் |
– |
ஒன்றுமறிகிறேனில்லை; |
|
ஒளி உடை வெள்ளறை நின்றாய்! ; |
||
| இது |
– |
இப்போது |
| பள்ளிகொள்போது ஆகும் |
– |
படுத்து உறங்குகிற வேளையாகும்; |
|
பரமனே! காப்பு இட வாராய். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக. பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப்போகிறதில்லை யென்கிறாள்.
English Translation
O Lord residing in bright and beautiful Vellarai! O Child-king who destroyed the cart and the twin Arjuna trees! After you drank the milk from the ogress Putana’s breast, I cannot understand things as they really are. It is bed time now. Come, let me ward off the evil eye.
