(194)
செப்போது மென்முலை யார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரப் பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்.
பதவுரை
| ஆள்வாய் |
– |
என்னை ஆளப்பிறந்தவனே! |
| முப்போதும் |
– |
மூன்று காலத்திலும் |
| வானவர் |
– |
தேவர்கள் |
| ஏத்தும் |
– |
ஸ்தோத்திரஞ்செய்கின்ற |
| முனிவர்கள் வெள்ளறை |
– |
(உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திருவெள்ளறையிலே |
| நின்றாய் |
– |
நிற்பவனே! (நீ) |
| செப்பு ஒது |
– |
பொற்கலசங்களை (உவமையாகச்) சொல்லத்தகுந்த |
| மெல் முலையார்கள் |
– |
மெல்லிய முலையையுடைய ஸ்திகள் |
|
(விளையாட்டாகச் செய்த) |
||
| சிறுசோறும் |
– |
மணற்சோற்றையும் |
| (சிறு)இல்லும் |
– |
மணல் வீட்டையும் |
| சிதைத்திட்டு |
– |
அழித்துவிட்டு (நிற்க) |
| அப்போது |
– |
அக்காலத்தில் |
| நான் |
– |
நான் |
| உரப்ப |
– |
கோபித்துச் சொல்ல |
|
(பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்) |
||
| போய் |
– |
அப்பாற்போய் |
| அடிசிலும் |
– |
சோற்றையும் |
| உண்டிலை |
– |
உண்ணாமலிருந்திட்டாய்; |
| இப்போது |
– |
இந்த மையத்திலே |
| நான் ஒன்றும் செய்யேன் |
– |
நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்; |
|
எம்பிரான் சாப்பிட வாராய். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து அப்பெண்களோடே வலிவிற் சண்டையிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான் உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோவென்று அஞ்சி நீ ஓடிப்போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்; இப்போது அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள்.
ஆள்வாய்! – என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு.
முப்போது – இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும். ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம்.
English Translation
O Lord of Vellarai, my Lord, my ruler! Gods and seers worship you thrice a day. Copper-hued supple-breasted girls were playing in the sand. You broke their houses and snatched their food. So I became angry and scolded you. For that you have refused to eat your pudding. No, I will not do anything to you; come, let me ward off the evil eye.
