(193)

(193)

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின் றபசு வெல்லாம்

நின்றொழிந் தேன்உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய்

மன்றில்நல் லேல்அந்திப் போதுமதிள் திரு வெள்ளறை நின்றாய்

நின்றுகண் டாய்என்தன் சொல்லுநான் உன்னைக் காப்பிட வாராய்.

பதவுரை

மதிள்

மதிளரணையுடைய
திருவெள்ளறை

திருவெள்ளறையிலே
நின்றாய்

நின்றருளினவனே!
மேல்

(என்) மேல்
ஒன்றும்

துன்பமும்
நேசம் இலாதாய்

அன்பில்லாதவனே!
உன்னை கூவி

உன்னைக் கூவிக்கொண்டு
நின்றொழிந்தேன்

நின்று விட்டேன்;

(அதனால்)

பசு எல்லாம்

பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து

கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற

கத்துகின்றன;

(நீ)

அந்தி போது

அந்திவேளையில்
மன்றில்

நாற்சந்தியில்
நில்வேல்

நில்லாதே;
என தன் சொல்லு

என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய்

(உனக்கு) நல்லதாகுங்கிடாய்:

நான் உன்னை காப்பு இட வாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த பசுக்களெல்லாம் கன்றுகளுள்ளவிடத்தில் வந்து சேர்ந்தபின்பும் கறப்பாரில்லாமல் முலைக்கடுப்பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து.  ‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலையுண்ணப் பெறாமையால் கத்துகின்றன; பசுக்கள் புறம்பேநின்று கொண்டு கன்றுகள் முலையூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக்கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம்.  ‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச்சொல்லாகவுங் கொள்வர்.  நேசம் – ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம்.

English Translation

O Loveless One! I stand here calling you while all the cows have gone to the pen and wait bellowing. Do not stand at the crossroads at dusk. Look, my rods are well-meant. O Lord who stands in the walled city of Vellarai, come, let me ward off the evil eye.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top