(194)

(194)

செப்போது மென்முலை யார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு

அப்போது நானுரப் பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய்

முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்

இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்.

பதவுரை

ஆள்வாய்

–

என்னை ஆளப்பிறந்தவனே!
முப்போதும்

–

­மூன்று காலத்திலும்
வானவர்

–

தேவர்கள்
ஏத்தும்

–

ஸ்தோத்திரஞ்செய்கின்ற
முனிவர்கள்  வெள்ளறை

–

(உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திருவெள்ளறையிலே
நின்றாய்

–

நிற்பவனே! (நீ)
செப்பு ஒது

–

பொற்கலசங்களை (உவமையாகச்) சொல்லத்தகுந்த
மெல் முலையார்கள்

–

மெல்லிய முலையையுடைய ஸ்திகள்

(விளையாட்டாகச் செய்த)

சிறுசோறும்

–

மணற்சோற்றையும்
(சிறு)இல்லும்

–

மணல் வீட்டையும்
சிதைத்திட்டு

–

அழித்துவிட்டு (நிற்க)
அப்போது

–

அக்காலத்தில்
நான்

–

நான்
உரப்ப

–

கோபித்துச் சொல்ல

(பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்)

போய்

–

அப்பாற்போய்
அடிசிலும்

–

சோற்றையும்
உண்டிலை

–

உண்ணாமலிருந்திட்டாய்;
இப்போது

–

இந்த மையத்திலே
நான் ஒன்றும் செய்யேன்

–

நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்;

எம்பிரான் சாப்பிட வாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து அப்பெண்களோடே வலிவிற் சண்டையிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான் உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோவென்று அஞ்சி நீ ஓடிப்போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்; இப்போது  அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள்.

ஆள்வாய்! – என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு.

முப்போது – இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும்.  ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம்.

English Translation

O Lord of Vellarai, my Lord, my ruler! Gods and seers worship you thrice a day. Copper-hued supple-breasted girls were playing in the sand. You broke their houses and snatched their food. So I became angry and scolded you. For that you have refused to eat your pudding. No, I will not do anything to you; come, let me ward off the evil eye.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top