(185)
தெருவின்கண் நின்றுஇள வாய்ச்சி மார்களைத் தீமைசெய்யாதே
மருவும் தமனக மும்சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்கன்று போலே
உருவ மழகிய நிம்பீ உகந்திவை சூட்டநீ வாராய்.
பதவுரை
| புருவம் |
– |
புருவங்களையும் |
| கரு குழல் |
– |
கருநிறமான கூந்தலையும் |
| பெற்றி |
– |
(இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு |
| பொலிந்த |
– |
விளங்குகின்ற |
| முகில் கன்றுபோலே |
– |
மேகக் கன்று போலே |
| உருவம் அழகிய |
– |
வடிவமழகிய |
| நம்பி |
– |
சிறந்தோனே! (நீ) |
| தெருவின் கண் நின்று |
– |
தெருவிலே நின்றுகொண்டு |
| இள ஆய்ச்சிமார்களை |
– |
இடைச்சிறுமிகளை |
| தீமை செய்யாதே |
– |
தீம்பு செய்யாமலிரு; |
| மருவும் |
– |
மருவையும் |
| தமனகமும் |
– |
தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின) |
| சீர்மாலை |
– |
அழகியமாலைகள் |
| மணம் கமழ்கின்ற |
– |
வாஸனை வீசுகின்றன; |
| இவை |
– |
இவற்றை |
| உகந்து |
– |
மகிழ்ச்சி கொண்டு |
|
சூட்ட நீ வாராய்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நீ தெருவிலே நின்றுஅவ்விடத்தில் விளையாடுகின்ற சிறிய இடைப்பெண்களைத் தீம்பு செய்து திரியாமல் மருவையும் தமனகத்தையுஞ் சேர்த்துக் கட்டின மணம் வீசுகின்ற மாலையை அந்த மணம் பழுதுபடாதபடி சூடிக்கொள்ள வா என்கிறாள். எம்பெருமானுக்கு ஏற்ற உவமைப்பொருள் கிடையாமையால் “புருவங் கருங்குழல் நெற்றி பொலிந்தமுகில் கன்று” என இல்பொருளுவமை கூறப்பட்டது. கமழ்கின்ற – ‘அன்’ சாரியை பெறாத முற்று.
English Translation
O Beautiful Lord, like a calf born to the dark clouds, with a bright forehead, curly locks and Shapely eyebrows! Do not stand in the streets and tease the young milkmaids. These are beautiful garlands with fragrant Maruvu and Davanam springs. Come here and wear them.
