(184)

(184)

மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு

கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய்

பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

மச்சொடு மாளிகை ஏறி

–

நடுநலையிலும் மேல் நிலையிலும் ஏறிப்போய்
மாதர்கள் தம் இடம்புக்கு

–

பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு

–

(அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை

–

பட்டாடைகளையும்
கிழித்து

–

கிழித்துவிட்டு
காம்பு துகில் அவை

–

(மற்றும் அப்பெண்கள் உடுத்துள்ள) கரைகட்டின சேலையையும்
கீறி

–

கிழித்துப்போட்டு

(இப்படியே)

நிச்சலும்

–

ப்ரதிநத்யம்
தீமைகள்

–

துஷ்டசேஷ்டைகளை
செய்வாய்

–

செய்பவனே!
நீள் திருவேங்கடத்து

–

உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய்

–

ஸ்வாமியே!
பச்சை

–

பசுநிறமுள்ள
தமனகத்தோடு

–

மருக்கொழுந்தையும்
பாதிரிப்பூ

–

பாதிரிப்பூவையும்

சூட்டவாராய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மேல்மாடங்களில் ஏகாந்தமாக வாழ்கின்ற பெண்களிடத்திலும் சென்று அவர்களுடைய கச்சுகளையும் பட்டாடைகளையும் கரைகட்டின சேலைகளையும் கிழித்துத் தீம்பு செய்வதை விட்டிட்டுப் பூச்சூட வரவேணுமென்பதாம்.  கச்சு – ‘கஞ்சுகம்’ என்ற வடசொற்சிதைவு  துகிலவை = அவை ஸ்ரீ முதல் வேற்றுமைச் சொல்லுருபு.  நிச்சல் – ‘நித்யம்’ என்ற வடசொல் விகாரம்.  தமநிகம் – வடசொல்.

English Translation

Climbing up the balcony and rooftops, you enter the ladies’ chamber, then tear up their pleated silk corset and shred their frilled linen. Daily you play such mischief. O My Lord of Tiruvenkatam hills, come wear these Padiri flowers with green Davanam springs.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top