(183)

(183)

கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்

உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்

திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய்

மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

கண்கள்

–

கண்களானவை
உன்னை கண்டால்

–

உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள்

–

கர்ப்பத்தையுடைய  (நீர்கொண்ட) மேகங்களை
கண்டால்

–

பார்த்தால் (அதை)
ஒக்கும்

–

ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய்

–

வடிவையுடையவனே!
உலகு ஏழும்

–

ஏழுலகங்களும்
உண்டாக

–

ஸத்தைபெறும்படி
வந்து பிறந்தாய்

–

திருவவதரித்தவனே!
திருஉடையாள்

–

(உன்னை) ஸம்பத்தாகவுடைய பிராட்டிக்கு
மணவாளா

–

நாயகனே!
திரு அரங்கத்தே

–

கோயிலிலே
கிடந்தாய்

–

பள்ளி கொண்டிருப்பவனே!
மணம்

–

வாஸனை
மருவி கமழ்கின்ற

–

நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப்பூ

–

மல்லிகைப்பூவை

சூட்டவாராய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற வடியையுடையவனே! உலகங்களுக்கு ஸத்தையுண்டாகும்படி இந்நிலத்தில் வந்து பிறந்தவனே!; திருவாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் திருவாயிருப்பவனே! இந்த மல்லிகைப்பூவின் பரிமளம் குன்றுவதற்கு முன்னே இதைச் சூடவா என்பதாம் ‘ஒக்கும்’ என்பதை முற்றாகக் கொண்டு கருவுடை மேகங்களைக் கண்டால் உன்னைக் காண்பதை ஒத்திருக்கும்: (அதுக்குமேலே) கண்கள் உருவுடையதாய் – கண்ணழகையுமுடையவனே! என்றும் உரைக்கலாம்.

English Translation

O beautiful One! When my eyes see you, they rejoice like they have seen the dark laden clouds. You took birth to redeem the seven worlds. O Bridegroom of the goddess of wealth, Lord reclining in Srirangam! Come, wear these Jasmine flowers of lasting fragrance.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top