(186)

(186)

புள்ளினை வாய்பிளந் திட்டாய் பொருகரி யின்கொம் பொசித்தாய்

கள்ள வரக்கியை மூக்கொடுகாவல னைத்தலை கொண்டாய்

அள்ளிநீ வெண்ணெய் விழுங்கஅஞ்சாது அடியேன் அடித்தேன்

தெள்ளிய நீரிலெ ழுந்த செங்கழு நீர்சூட்ட வாராய்.

பதவுரை

புள்ளினை

பகாஸுரனை
வாய்பிளந்திட்டாய்

வாய்கிழித்துப் பொகட்டவனே!
பொரு

யுத்தோந்முகமான
கரியின்

குவலயாபீடத்தின்
கொம்பு

கொம்பை
ஒசித்தாய்

பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு

வஞ்சனையுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பனகையின் மூக்கையும்
காவலனை

(அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை

தலையையும்
கொண்டாய்

அறுத்தவனே!
நீ

(இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய்

வெண்ணெயை
அள்ளி விழுங்க

வாரி விழுங்க
அஞ்சாது

சிறிதும் பயப்படாமல்
அடியேன்

(‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன்

அடித்தேன்;

(அப்பிழையைப் பொறுத்து)

தெள்ளிய

தெளிவான
நீரில்

நீரிலே
எழுந்த

உண்டான
செங்கழுநீர்

செங்கழுநீரை

சூட்டவாராய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கொக்கின் வாயைக் கீண்டொழித்தவனே!  நீ எது செய்தாலும் உன்னுடைய வல்லமையைக் கண்டு நான் வெறுமனேயிருக்க வேண்டியதாயிருந்தும் நீ வெண்ணெணை வாரி உட்கொண்டதைக் கண்டு ‘இவன் இப்படியே வேறு வீடுகளிற் போய்ச் செய்தால் பழிவருமே’ என்று நினைத்து அஞ்சாமல் அடித்துவிட்டேன்; அவஸரப்பட்டு நான் செய்தவிதைப் பொறுத்துச் செங்கழுநீர்ப்பூச் சூடவா என்கிறாள்.  புஷ்பம் மேலே பட்டாலும் வாடும்படியான உன்னுடைய ஸௌகுமார்யத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதாயிருக்க அப்படி அஞ்சாமல் அடித்ததைப் பொறுத்துப் பூச்சூட வரவேணுமென்பதாகவுங் கொள்ளலாம்.  அடியேன் = ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரத்திலீடுபட்டுச் சொல்லுகிற சொல்:” மரபுவழுவமைதி; அடித்தபின்பு அநுதாபங்கொண்டு அடியேன் என்றாளெனினுமாம்.

English Translation

You ripped the beak of the bird Bakasura, you plucked the tusk of the rutted elephant Kuvalayapida, you cut the nose of the demoness Supanakha and the heads of the demon king Ravana. When you gobbled hutter, I this lowely self, beat you without fear! Come here and wear this fresh-water lotus garland.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top