(187)

(187)

எருதுக ளோடு பொருதி ஏதும் உலோபாய்கான் நம்பி

கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்

தெருவின்கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்க ளோடு

பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

நம்பி

சிறந்தோனே!

(நப்பின்னையை மணம் புணர்வதற்காக)

எருதுகளோடு

ஏழு ரிஷபங்களுடன்
பொருதி

போர்செய்யா நின்றாய்;
ஏதும்

எதிலும் (ஒன்றிலும்)
உலோபாய் காண்

விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;
கருதிய

(கம்ஸன் உன்மேல் செய்ய) நினைத்த
தீமைகள்

தீம்புகளை
செய்த

(நீ அவன் மேற்) செய்து
கம்ஸனை

அந்தக் கம்ஸனை
கால்கொடு

காலினால் (காலைக்கொண்டு)
பாய்ந்தாய்

பாய்ந்தவனே!

(அக்ரூரர் மூலமாயழைக்கப்பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம்போது)

தெருவின் கண்

தெருவிலே
தீமைகள் செய்து

தீமைகளைச் செய்து கொண்டுபோய்
சிக்கென

வலிமையாக
மல்லர்களோடு

(சாணூரமுஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே
பொருது வருகின்ற

போர் செய்து வந்த
பொன்னே

பொன்போலருமையானவனே!

புன்னைப்பூ சூட்ட வாராய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொருதி = முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று.  (எருதுகளோடே பொருதது) காலாந்தரமாயிருக்கச் செய்தேயும் தற்காலம் போலே ப்ரகாசிக்கையாலே ‘பொருதி’ என்று வர்த்தமாகமாகச் சொல்லுகிறது என்ற பெரிய ஜீயர் உரை நோக்கத்தக்கது.  உலோபாய் = ‘???’ என்ற வடமொழியின் திரிபாகிய ‘உலோபம்’ என்பதனடியாக வந்த எதிர்மறை முற்று.  உடம்பைப் பேணுதல் உயிரைப்பேணுதல் ஒன்றும் செய்யாதிராநின்றாய் என்று கருத்து.  போம் வழியில் வண்ணானைக் கொன்று வஸ்த்ரங்களைப் பறித்துக்கொண்டமை கம்ஸனுடையவில்லை முறித்தமை குவலயாபீடத்தைக் கொன்றமை முதலியன – இங்கு தெருவின் கண் செய்த தீமைகளாகும். கண் – ஏழனுருபு.

English Translation

My Lord, you battled with the bulls for Nappinnai. See, you have no concern. Returning Kamsa’s cruelty you leapt over him and smote him. Acting wickedly in the streets you quickly pick up a fight with the wrestlers. My child, precious as gold, come wear these Punnai flowers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top