(183)
கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய்
மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.
பதவுரை
| கண்கள் |
– |
கண்களானவை |
| உன்னை கண்டால் |
– |
உன்னைப் பார்த்தால் |
| கரு உடை மேகங்கள் |
– |
கர்ப்பத்தையுடைய (நீர்கொண்ட) மேகங்களை |
| கண்டால் |
– |
பார்த்தால் (அதை) |
| ஒக்கும் |
– |
ஒத்துக் குளிர்கின்ற |
| உரு உடையாய் |
– |
வடிவையுடையவனே! |
| உலகு ஏழும் |
– |
ஏழுலகங்களும் |
| உண்டாக |
– |
ஸத்தைபெறும்படி |
| வந்து பிறந்தாய் |
– |
திருவவதரித்தவனே! |
| திருஉடையாள் |
– |
(உன்னை) ஸம்பத்தாகவுடைய பிராட்டிக்கு |
| மணவாளா |
– |
நாயகனே! |
| திரு அரங்கத்தே |
– |
கோயிலிலே |
| கிடந்தாய் |
– |
பள்ளி கொண்டிருப்பவனே! |
| மணம் |
– |
வாஸனை |
| மருவி கமழ்கின்ற |
– |
நீங்காமலிருந்து பரிமளிக்கிற |
| மல்லிகைப்பூ |
– |
மல்லிகைப்பூவை |
|
சூட்டவாராய்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற வடியையுடையவனே! உலகங்களுக்கு ஸத்தையுண்டாகும்படி இந்நிலத்தில் வந்து பிறந்தவனே!; திருவாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் திருவாயிருப்பவனே! இந்த மல்லிகைப்பூவின் பரிமளம் குன்றுவதற்கு முன்னே இதைச் சூடவா என்பதாம் ‘ஒக்கும்’ என்பதை முற்றாகக் கொண்டு கருவுடை மேகங்களைக் கண்டால் உன்னைக் காண்பதை ஒத்திருக்கும்: (அதுக்குமேலே) கண்கள் உருவுடையதாய் – கண்ணழகையுமுடையவனே! என்றும் உரைக்கலாம்.
English Translation
O beautiful One! When my eyes see you, they rejoice like they have seen the dark laden clouds. You took birth to redeem the seven worlds. O Bridegroom of the goddess of wealth, Lord reclining in Srirangam! Come, wear these Jasmine flowers of lasting fragrance.
