(174)

(174)

கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்

பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்வாய் கீண்டான்

நெறித்த குழல்களை நீங்கமுன் னோடி

சிறுக்கன்று மேய்ப்பாற்குஓர் கோல்கொண்டுவா தேவ பிரானுக்குஓர் கோல்கொண்டுவா

பதவுரை

கறுத்திட்டு

கோபித்து
எதிர்நின்ற

தன்னை எதிரிட்டு நன்ற
கஞ்சனை

கம்ஸனை
கொன்றான்

கொன்றவனும்
எதிர்வந்த

(தன்னைக் கொல்வதாக) எதிர்த்துவந்த
புள்ளின்

பகாஸுரனுடைய
வாய்

வாயை
பொறுத்திட்டு

(முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து
கீண்டான்

(பின்பு) கிழித்தவனும்
நெறித்த

நெறித்திராநின்றுள்ள
குழல்கள்

கூந்தல்கள்
நீங்க

ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும்படியாக
முன்ஓடி

கன்றுகளுக்கு முன்னேபோய்
சிறுகன்று

இளங்கன்றுகளை
மேய்ப்பாற்கு

மேய்ப்பவனுமாகிய இவனுக்கு

ஓர் கோல் கொண்டுவா –

தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொறுத்திட்டுக் கீண்டான் – பகாஸுரன், தன்னை விழுங்கி உமிழுமளவும் கண்ணன் அவனை ஒன்றுஞ் செய்யாதிருந்து பின்பே அவன் வாயைக் கிழித்ததனால் பொறுமை விளங்குமென்க.  குழல்களை – ஐ – சாரியை.  இது இல்லாதபோது தளைதட்டுமென்க

English Translation

He killed the angry hostile kamsa, and stooped the charging horse kesin and ripped its jaws. He runs faster than his grazing calves, parting his curly hair. He is the Lord of gods. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top