(173)

(173)

கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும்

எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்

சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்கநில்

அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா

பதவுரை

கொங்கு

வாஸனை பொருந்திய
குடந்தையும்

திருக்குடந்தையிலும்
கோட்டி ஊரும்

திருக்கோட்டியூரிலும்
பேரும்

திருப்பேர் நகரிலும்
எங்கும்

மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம்
திரிந்து

ஸஞ்சரித்து
விளையாடும்

விளையாடுகின்ற
என் மகன்

என் பிள்ளையினுடைய
சங்கம் பிடிக்கும் தடகைக்கு

பாஞ்சஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு
தக்க

தகுந்ததான
நல்அங்கம் உடையது

நல்ல வடிவை யுடையதாகிய

ஓர் கோல் கொண்டு வா –

அரக்கு வழித்தது

(நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய

ஓர் கோல் கொண்டுவா –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கொங்கு + குடந்தை = கொங்குக் குடந்தை என வரவேண்டுவது செய்யுளின்பம் நோக்கிக் “கொங்குங் குடந்தையும்“ என வந்ததென்க.  அரக்கு – செந்நிறமெனினுமாம்.

English Translation

My son roams and plays in fragrant Kudandai, Tirukkotiyur, and Tirupper. Choose a good staff that fits his large conch-holding hand, and polish it with lacquer. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top