(172)

(172)

வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி

தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற்பூண்டு

பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு

காலிப்பின் போவாற்குஓர் கோல்கொண்டுவா கடல்நற வண்ணற்குஓர் கோல்கொண்டுவா.

பதவுரை

(அக்காக்காய்)

காக்கையே!
வேலிகோல்

வேலிக்கால்களிலுள்ள கோலை
வெட்டி

(வாளால்) வெட்டி (அதை)
விளையாடு வில்

லீலோபகரணமான வில்லாகச் செய்து
ஏற்றி

(அதிலே) நாணேற்றியும்,
கொழுந்து தாலியை

சிறந்த ஆமைத்தாலியை
தடங்கழுத்தில்

(தனது) பெரியகழுத்திலே
பூண்டு

அணிந்து கொண்டும்
பீலித்தழையை

மயில் தோகைகளை
பிணைத்து

ஒன்றுசேர்த்து
பிறகு இட்டு

பின்புறத்திலே கட்டிக்கொண்டும்
காலி பின்

பசுக் கூட்டங்களின் பின்னே
போவாற்கு

போகி்ன்ற இவனுக்கு
ஓர்கோல்

ஒரு கோலை கொண்டுவா –

கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இடைச்சாதிக்குத் தக்கபடி ஆமைத்தாலி என்னும் ஒரு வகை ஆபரணத்தைக் கழுத்திலணிந்தும், மயில் தோகைகளைச் சேர்த்துக் கட்டிப் பின்புறத்திலிருந்தும் வேலிக்கால்களிலே வெட்டின சிறு கோல்களை வில்லாகச் செய்து நாணேறிட்டு வளைத்து விளையாடிக்கொண்டே கன்றுகளை மேய்த்துக் கொண்டே செல்லுகின்ற என் மகனுக்குக் கோல் கொண்டுவா‘ என்கை.  வேலிக்கோல் – வேலிக் கால்களிலே வளர்ந்த சிறுகோல்களென்னுதல், வளைவையுடைய கோலென்னுதல்.  தாலிக்கொழுந்தை – உருபு பிரித்துக் கூட்டுக.  தாலிகொழுந்து – பனையின் (வெண்ணிறமான) குருத்தென்றும் உரைக்கலாம்.  இதை ஓர் அணியாகச் சமைத்துக் கழுத்திலணிதல் முற்காலத்து இயல்பென்க.  இப்பொருளில், தாளி –தாலியென ளகரத்திற்கு லகரம் போலியாக வந்ததாம்.  “விளையாடு வில்லேந்தி“ என்ற பாடத்தில், ‘வேலிக்கால்களிலே கோலைவெட்டி, (அதை) விளையாடு வில்லாக (க்கையில்) ஏந்திக்கொண்டு‘ என்று பொருள் கொள்ளலாம்.

English Translation

The ocean-hued Lord wears a talisman made of tender Palm leaf around his neck, sticks a fan made of peacock feathers on his back, makes a toy bow with a stick cut from the hedge and goes after the cows. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top