(175)
ஒன்றே யுரைப்பான் ஒருசொல்லே சொல்லுவன்
துன்று முடியான் துரியோ தனன்பக்கல்
சென்றுஅங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா கடல்நிற வண்ணர்க்குஓர் கோல்கொண்டுவா.
பதவுரை
| ஒன்றே |
– |
(‘பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை |
| உரைப்பான் |
– |
சொல்லுபவனும் |
|
(மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசிகுத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற) |
||
| ஒரு சொல்லே |
– |
ஒரு சொல்லையே |
| சொல்லுவான் |
– |
சொல்லுபவனும் |
| துன்று முடியான் |
– |
(நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான |
| துரியோதநன் பக்கல் |
– |
துரியோதநனிடத்தில் |
| சென்று |
– |
தூது போய் |
| அங்கு |
– |
அவ்விடத்தில் |
| பாரதம் |
– |
பாரதயுத்தத்தை |
| கையெறிந்தானுக்கு |
– |
உறுதிப்படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு |
|
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா – |
||
|
கடல்நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா – |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முதலடியிற் குறித்த அடைமொழிகள் இரண்டையும் எம்பெருமானுக்காக்கி “????? மித்ரபாவேநஸம்ப்ராப்தம் நி த்பஜேயம் கதஞ்சக” என்ற ஒரு அர்த்தத்தையே சொல்லுபவனும், “??? அபயம் ஸர்வபூதேப்யோ கதாம்யேதத் வ்ரதம் மம” என்ற ஒரு சொல்லே சொல்லுபவனுமாகிய என்று உரைத்து, ‘கையெறிந்தானுக்கு‘ என்பனோடு கூட்டி உரைத்தலு மொக்கும். கையெறிதல் – கையடித்தல். இது பிரமாணம் செய்யும் வகையிலொன்று. இங்கு சென்று – துர்யோதநனிடம் தூதுபோய், (அவன் ஒன்றுங் கொடுக்க இசையாததனால்), அங்கு – பாரதயுத்தத்தில், கை யெறிந்தானுக்கு – ஸேனையை வகுத்துக் கொண்டு யுத்தம் செய்தவனுக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.
English Translation
Always saying the same thing and saying it with consistency, he went to the gem-crowned Duryodhana as a messenger, then waged the great Bharata war. The ocean hued Lord goes after his calves. O Raven! Go fetch him a grazing staff.
