(169)

(169)

உந்தி யெழுந்த உருவம லர்தன்னில்

சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்

கொந்தக்குழலைக் குறந்து புளியட்டி

தந்தத்தின் சீப்பால் குழல்வாராய்அக் காக்காய் தாமோ தரன்தன்குழல் வாராய்அக் காக்காய்.

பதவுரை

அக்காக்காய்!-

உந்தி

(தனது) திருநாபியிலே
எழுந்த

உண்டான
உருவம்

ஸுருபத்தையுடைய
மலர் தன்னில்

தாமரைப்பூவிலே
சந்தம்

சந்தஸ்ஸை நிரூபகமாகவுடைய
சதுமுகன் தன்னை

நான்முகனை
படைத்தவன்

ஸ்ருஷ்டித்த இவனுடைய
புளி அட்டி கொந்தம் குழலை

புளிப்பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பையுடைய கூந்தலை
தந்தத்தின் சீப்பால்

தந்தத்தினாற் செய்த சீப்பாலே
குறந்து

சிக்கு விடுத்து
குழல் வாராய்

வாருவாயாக

அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ் “வெண்ணெயளைந்த குணுங்கும்” என்ற திருமொழியில் கூறியபடி யசோதைப்பிராட்டி ஸ்ரீக்ருஷ்ணனை எண்ணெய் தேய்த்துப் புளிப்பழமிட்டு நீராட்டியதனால், அப்படி நீராடின ஸ்ரீக்ருஷ்ணனுடைய கூந்தல் நெறித்திருக்கும்.  ஆதலால், யசோதையானவள் ‘காக்கையே! நெறிப்புப் போம்படி எண்ணெய் தடவித் தந்தச் சீப்பினால் தலைவாரவேணும்’ என்கிறாள்.  ‘புழுகட்டி’ என்றும் பாடம்.  புழுகு – புனுகு எண்ணெய். அதைத் தடவிக் குழல்வாராய் என முடிபுகாண்க.  ?????  ???? என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.

English Translation

O Raven this is Damodara. On a beautiful lotus springing from his novel, he creates the four-faced Brahma and all else. Gather his trick hair washed with soap nut, and comb it, come and comb his hair with an ivory comb.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top