(168)

(168)

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும்

உண்டற்கு வேண்டிநீ ஓடித் திரியாதே

அண்டத்து அமரர் பெருமான் அழகமர்

வண்டொத் திருண்டகுழல் வாராய்அக் காக்காய் மாயவன்தன் குழல் வாராய்அக் காக்காய்.

பதவுரை

அக்காக்காய்!-

பிண்டம் திரளையும்

(பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும்
பேய்க்கு இட்ட

பிசாசங்களுக்குப் போகட்ட
நீர் சோறும்

நீரையுடைய சோற்றையும்
உண்டற்கு

உண்ணுதற்கு
வேண்டி

விரும்பி
நீ ஓடி திரியாதே

நீ பறந்தோடித் திரியவே வேண்டா
அண்டத்து

மேலுலகத்திலுள்ள
அமரர்

தேவர்களுக்கு
பெருமான்

தலைவனாகிய இக்கண்ணபிரானுடைய
அழகு அமர்

அழகு பொருந்திய
வண்டு ஒத்து இருண்ட

வண்டைப் போல் கருநிறமான

குழல்வாராய் –

மாயவன் தன்

ஆச்சர்யச் செயல்களையுடைய இவனுடைய

குழல் வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தந்தை தாய் முதலானார் இறந்த திதியில் செய்யும் க்ராத்தத்தில் பித்ராதி தேவதைகளை உத்தேசித்துப் பிண்டவுருண்டையைக் காகத்தை அழைத்து இடுவதும், பிசாசம் முதலியவற்றைக் குறித்து ஜலத்தோடு கூடிய சோற்றைப் பலிகொடுத்தலும் வழக்கமென்க. இப்படி கண்ட சோற்றுக்கும் அலைந்து திரியாமல் இவனுடைய குழலை வார வரவேணுமென்றதாயிற்று.

English Translation

O Raven, do not go roaming, desirous of eating the coocked rice offered with water to the manes and ghouls. The Lord of gods, Lord of the Universe with beautiful dark curls like bumble-bees, is a wonder to behold. Comb his hair, come and comb his hair.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top