(170)
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன்இவ் வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணை மேல்வைத்து
பின்னேயிருந் துகுழல் வாராய்அக் காக்காய்
பேரா யிரத்தான்குழல் வாராய்அக் காக்காய்.
பதவுரை
|
அக்காக்காய்!- |
||
| முன் |
– |
வாமநாவதாரகாலத்தில் |
| மன்னன்தன் |
– |
அஸுரராஜனான மஹாபலியினுடைய |
| தேவிமார் |
– |
மனைவியர்கள் |
| கண்டு |
– |
(தன்னுடைய) வடிவைக்கண்டு |
| மகிழ்வு எய்த |
– |
மகிழ்ச்சி யடையும்படி |
|
(மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன்நான் மாவலி)’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்) |
||
| இ உலகினை முற்றும் |
– |
இந்த வுலகங்கள் முழுவதையும் |
| அளந்தவன் |
– |
அளந்துகொண்ட இவனுடைய |
| பொன்முடியினை |
– |
அழகிய தலையை |
| பூஅணை மேல் வைத்து |
– |
புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து |
| பின்னே இருந்து |
– |
(இவனது) பின்புறத்திலே இருந்துகொண்டு |
|
குழலவாராய்!- அக்காக்காய்!- |
||
| பேர் ஆயிரத்தான் |
– |
ஸஹஸ்ரநாமங்களையுடைய இவனுக்கு |
|
குழல்வாராய் – |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எல்லா இந்திரியங்களையும் ஆகர்ஷிக்கவல்ல வாமநவடிவையும், பிரமசாரி ஆச்ரமத்துக்கு ஏற்றவாறு கொண்ட கோலத்தையும் – மழலைச் சொல் சொல்லும் அழகையும் கண்டு மஹாபலியின் மனைவியரும் மகிழ்ந்தனராம். பொன்னின் = இன் – சாரியை. பூ அணை – புஷ்பம்போல் ம்ருதுவான படுக்கை யென்றுமாம்.
English Translation
Long ago when he came as a beautiful manikin, the wives of King Bali were pleased to see him. Then he grew and measured the whole Universe. He has a thousand names. O Raven, rest his golden locks on a flowery support and comb it from behind, come and comb his hair.
