(164)
திண்ணக் கலத்தில் திரையுறி மேல்வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம்
கண்ணனை வந்துகுழல் வாராய்அக் காக்காய் கார்முகில் வண்ணன்குழல் வாராய்அக் காக்காய்.
பதவுரை
|
அக்காக்காய்!- |
||
| திரை |
– |
பின்னுதலையுடைய |
| உறிமேல் வைத்த |
– |
(பெரிய) உறிமேல் வைத்த |
| திண்ணம் கலத்து |
– |
த்ருடமான பாத்ரத்திலுள்ள |
| வெண்ணெய் |
– |
வெண்ணெயை |
| விழுங்கி |
– |
உட்கொண்டு |
| விரைய |
– |
விரைவாக (ஓடிவந்து) |
| உறங்கிடும் |
– |
பொய்யுறக்க முறங்குகின்ற |
| அண்ணல் |
– |
ஸ்வாமியும் |
| அமரர் |
– |
நி்த்யஸுரிகளுக்கு |
| பெருமானை |
– |
நிர்வாஹகனும் |
| ஆயர்தம் கண்ணனை |
– |
இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை |
|
வந்து குழல் வாராய் – |
||
|
அக்காக்காய்!- |
||
| கார்முகில் |
– |
காளமேகம் போன்ற |
| வண்ணன் |
– |
நிறத்தையுடையனான இவனுடைய |
|
குழல் வாராய் – |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திண்ணம்- ‘அம்’ விகுதிபெற்ற பண்புப் பெயர். கலம் – ‘கலசம்’ என்ற வடசொற் சிதைவு என்னலாம். “விரையனுறங்கிடும்“ என்பதும் பாடம்.
English Translation
This is the great one who opens the tight jar hanging from the ceiling, gobbles up the butter and quickly falls asleep. He is Krishna, the Lord of the celestials, dear to the cowherd-folk, dark as the rain-cloud’s hue. O Raven, O Raven, comb his hair, come and comb his hair.
