(163)

(163)

பேயின் முலையுண்ட பிள்ளை இவன்முன்னம்

மாயச் சகடும் மருதும் இறுத்தவன்

காயா மலர்வண்ணன் கண்ணன் கருங்குழல்

தூய்தாக வந்துகுழல் வாராய்அக் காக்காய் தூமணி வண்ணன்குழல் வாராய்அக் காக்காய்.

பதவுரை

அக்காக்காய்!-

இவன்

இப்பிள்ளை
முன்னம்

முன்பு
பேயின் முலை

பூதனையின் முலையை
உண்ட

(அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை

பிள்ளைகாண்

(அன்றியும்)

மாயம்

வஞ்சனையுள்ள
சகடும்

சகடத்தையும்
மருதும்

யமளார்ஜுகங்களையும்
இறுத்தவன்

முறித்தவன்
காயாமலர் வண்ணன்

காயாம்பூப்  போன்ற திருநிறத்தை உடையவன்
கண்ணன்

‘க்ருஷ்ணன்’ என்னும் பேரையுடையவன்
கருகுழல்

கருநிறமான கூந்தலை
வந்து

(நீ) வந்து
தூய்து ஆக குழல்வாராய்

நின்றாக வாருவாயாக.
தூமணி

பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணன்

நிறத்தையுடைய இவனுக்கு குழல் வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தூய்தாக – தலையிற் சிக்குப்படாமல் மழமழவென்றிருக்கும்படி, “குழல்வாராய்” என்ற தொடர் – ஒரு சொல் நீர்மைத்தாய் வாருதல் என்ற தொழிலை மாத்திரம் உணர்த்தும்.  ஆதலால், ‘கருங்குழல் குழல்வாராய்’ என்றது. (புநிருக்தி தோஷமில்லை என்க.)

English Translation

This is the child who drank Putana’s breast milk. He is the one who smote the cart and broke the Marudu trees, he is the gem hued Lord, Krishna, dark as the Kaya flower, with washed dark tresses. O Raven, comb his hair, come and comb his hair.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top