(165)
பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு
கள்ள வசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிது வென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்துகுழல் வாராய்அக் காக்காய் பேய்முலை யுண்டான்குழல் வாராய்அக் காக்காய்.
பதவுரை
|
அக்காக்காய்!- |
||
| பள்ளத்தில் |
– |
நீர்த்தாழ்வுகளிலே |
| மேயும் |
– |
இரையெடுத்துத் திரிகின்ற |
| பறவை |
– |
(கொக்கு என்னும்) பஷியின் |
| உரு |
– |
ரூபத்தை |
| கொண்டு |
– |
ஏறிட்டு்க்கொண்டு |
| வருவான் |
– |
வருபவனாகிய |
| கள்ளம் அசுரனை |
– |
வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை) |
| தான் கண்டு |
– |
தான்பார்த்து (அவனை) |
| இது புள் என்று |
– |
இது பஷியேயென்று (ஸாமாந்யமாக நினைத்து) |
| பொதுக்கோ |
– |
விரைவாக |
| வாய் |
– |
(அவ்வஸுரனது) வாயை |
| தீ்ண்டிட்ட |
– |
கிழித்துப்போட்ட |
|
பிள்ளையை வந்து குழல் வாராய் – |
||
|
அக்காக்காய்! பேய்முலை உண்டான் குழல்வாராய் -. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
யமுனைக் கரையிலே கண்ணபிரானைப் பகாஸுரன் விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போலே எரிக்கவே அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்திட்டனன் என்பது – பகாஸுரவதவ்ருத்தாந்தம். பொதுக்கோ – பொதுக்கென. (“பிதுக்கென்று புறப்பட்டான்” என்று திரிந்து வழங்கிவருதல் காண்க.)
English Translation
Baka the evil Asura took the form of a stroke fishing in water. As if he were a mere bird, this child ripped apart his beaks. He is the one who sucked Putana’s breasts. O Raven, comb his hair, come and comb his hair.
