(159)

(159)

கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து

பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்

நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்

நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.


பதவுரை

கன்றினை

–

கன்றினுடைய
வால்

–

வாலிலே
ஓலை கட்டி

–

ஓலையைக்கட்டி
(கன்றை)

–

(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்லவந்த ஒரு) கன்றை

(எறிகுணிலாகக்கொண்டு, அஸுராவேசமுள்ள விளாமரத்தின்)

கனிகள்

–

பழங்கள்
உதிர

–

(கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து

–

வீசி
பின்

–

பின்பு
ஓடி தொடர்ந்து

–

ஓடிப்போய்
ஓர் பாம்பை

–

(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக்கொண்டு

–

பிடித்துக்கொண்டு
ஆட்டினாய் போலும்

–

ஆட்டினவ்னோதான் (நீ);
நம்பி

–

ஒன்றிலும் குறைவில்லாதவனே!

(நான்)

நின் திறத்தேன் அல்லேன் –;

–

உன் விஷயமொன்றையுமறியாதவளாயிரா நின்றேன்

(அதுகிடக்கட்டும்;)

நீ பிறந்த

–

நீ அவதரித்த
நல் திரு நாள்

–

திருநிஷத்திரமாகும் (இந்நாள்);

(ஆகையால்)

நீ நின்று நீர் ஆடவேண்டும்

நாரணா ஓடாதே வாராய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,’கன்றினை வாலோலை கட்டி’ என்றார். கன்றினை-உருபுமயக்கம், [நன் இத்யாதி,] ‘அத்தைச்செய்தான் இத்தைச்செய்தான்’ என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது, உன்னுடைய தன்மையை நனைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.

English Translation

You tied a palm leaf to a calf‘s tail, then threw a calf against a tree felling its fruits. You ran after a snake, grabbed and shook its tail, and danced on its hood. Alas, I am not match for you. Today is your auspicious birthday. O Narayana, do not run away. Come, you must have your bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top