(155)
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.
பதவுரை
| கஞ்சன் |
– |
கம்ஸனுடைய |
| புணர்ப்பினில் |
– |
கபடமான ஆலோசனையினாலே |
| வந்த |
– |
(நலிவதாக) வந்த |
| கடிய |
– |
(அஸுராவேசத்தாலே) க்ரூரமான |
| சகடம் |
– |
சகடத்தை |
| உதைத்து |
– |
(திருவடிகளால்) உதைத்து முறித்துவிட்டு, |
| வஞ்சகம் |
– |
வஞ்சனையுள்ள |
| பேய்மகள் |
– |
பூதனையானவள் |
| துஞ்ச |
– |
முடியும்படி |
| முலை |
– |
(அவளுடைய) முலையிலே |
| வாய்வைத்த |
– |
வாயைவைத்த |
| பிரானே |
– |
உபகாரகனே! |
|
(உன்மேனி நிறம்பெறும்படி சாத்துவதற்கு உரிய) |
||
| மஞ்சளும் |
– |
மஞ்சளையும் |
| செங்கழுநீரின் வாசிகையும் |
– |
(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும் |
| நாறு சாந்தும் |
– |
பரிமளிதமான சந்தநத்தையும் |
| அஞ்சனமும் |
– |
(கண்களிலிடும்) மையையும் |
|
கொண்டு வைத்தேன் — |
||
|
அழகனே! நீராட வாராய் – |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி நீ நீராடவேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.
English Translation
O Lord who smote the devilish cart instigated by Kamsa, and sucked the life out of Putana, I have gathered turmeric, lotus garland, fragrant Sandal paste, and Kohl. O Beautiful One, come for your bath!
