(148)

(148)

காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்

தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே

சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி

ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே.

பதவுரை

காதுகள்

–

(என்னுடைய) காதுகள்
வீங்கி

–

வீங்கிப்போய்
எரியில்

–

எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்

–

(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்

–

(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)

–

நேரிட்டதான
இழுக்கு

–

சேதம்
என்

–

ஏதேனுமுண்டோ?

(என்று கண்ணன்  சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)

(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது)

தாரியாது ஆகில்

–

‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று

–

(குழந்தைக்குத்) தலைநோய் உண்டாய்விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்

–

(முன்னமே காது குத்தாமல்) இருந்துவிட்டேன்

அன்பினால் அப்படி விட்டிருந்தது)

குற்றமே அன்றே

–

(என்னுடைய)  குற்றமேயாமல்லவா?
ஏர்விடை

–

அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று

–

அழித்து
இள கன்று

–

சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட

–

(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்

–

ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே

–

எனக்குக் கண்போன்றவனே’
சேரியில்

–

இவ்விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்

–

எல்லாப் பிள்ளைகளும்
காதுபெருக்கி

–

காதைப் பெருக்கிக்கொண்டு
திரியவும்

–

திரியாநிற்பதையும்
காண்டி

–

நீ காணாநின்றாயன்றோ’

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப்போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம்.  தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும், அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க.  காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.

English Translation

O Hrishikesa, You say, “If my ears inflame, what is the difference between you and those girls?” Alas, I bored your ears without a thread fearing it might ache your head. It is my mistake. O Lord who killed the bull Arishtanemi and the calf Vatsasura, dear-as-my-eyes! Look, all the village children go about with thread in their ear-bore.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top