(148)
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே.
பதவுரை
| காதுகள் |
– |
(என்னுடைய) காதுகள் |
| வீங்கி |
– |
வீங்கிப்போய் |
| எரியில் |
– |
எரிச்சலெடுத்தால், |
| காரிகையார்க்கும் |
– |
(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும் |
| உனக்கும் |
– |
(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும் |
| உற்ற(து) |
– |
நேரிட்டதான |
| இழுக்கு |
– |
சேதம் |
| என் |
– |
ஏதேனுமுண்டோ? |
|
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்) |
||
|
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது) |
||
| தாரியாது ஆகில் |
– |
‘(திரியை இடுவது) பொறாமற்போனால் |
| தலை நொந்திடும் என்று |
– |
(குழந்தைக்குத்) தலைநோய் உண்டாய்விடுமே’ என்று நினைத்து |
| விட்டிட்டேன் |
– |
(முன்னமே காது குத்தாமல்) இருந்துவிட்டேன் |
|
அன்பினால் அப்படி விட்டிருந்தது) |
||
| குற்றமே அன்றே |
– |
(என்னுடைய) குற்றமேயாமல்லவா? |
| ஏர்விடை |
– |
அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை |
| செற்று |
– |
அழித்து |
| இள கன்று |
– |
சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை |
| எறிந்திட்ட |
– |
(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய |
| இருடீகேசர் |
– |
ஹ்ருஷீகேசனே’ |
| என்றன் கண்ணே |
– |
எனக்குக் கண்போன்றவனே’ |
| சேரியில் |
– |
இவ்விடைச் சேரியில் |
| பிள்ளைகள் எல்லாரும் |
– |
எல்லாப் பிள்ளைகளும் |
| காதுபெருக்கி |
– |
காதைப் பெருக்கிக்கொண்டு |
| திரியவும் |
– |
திரியாநிற்பதையும் |
| காண்டி |
– |
நீ காணாநின்றாயன்றோ’ |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப்போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம். தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும், அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க. காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.
English Translation
O Hrishikesa, You say, “If my ears inflame, what is the difference between you and those girls?” Alas, I bored your ears without a thread fearing it might ache your head. It is my mistake. O Lord who killed the bull Arishtanemi and the calf Vatsasura, dear-as-my-eyes! Look, all the village children go about with thread in their ear-bore.
