(149)

(149)

கண்ணைக் குளிரக் கலந்துஎங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழ லார்கள்

எண்ணத்துள் என்றும் இருந்துதித் திக்கும் பெருமானே எங்க ளமுதே

உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்

பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநா பாஇங்கே வாராய்.

பதவுரை

குளிர

மனங்குளிரும்படி
கண்ணை

(உன்) கண்ணை

(இடைப் பெண்களுடைய கண்களோடு)

கலந்து

சேர்த்து,
எங்கும்

(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி

பார்த்து,
கடி கமழ்

வாஸனை வீசுகின்ற
பூ

புஷ்பங்களணிந்த
குழலார்கள்

கூந்தலையுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்

மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து

எப்போது மிருந்துகொண்டு
தித்திக்கும்

ரஸிக்கின்ற
பெருமானே

பெருமையையுடையவனே1
எங்கள் அமுதே

எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண

(நீழண) தின்பதற்கு
கனிகள்

(நாவல் முதலிய) பழங்களை
தருவன்

கொடுப்பேன்
கடிப்பு

காதணியை
ஒன்றும் நோவாமே

சிறிதும் நோவாதபடி
காதுக்கு

(உன்னுடைய) காதிலே
இடுவன்

இடுவேன்
சகடம்

(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட

கட்டுக்குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா

பத்மநாபனே’

இங்கே வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘கண்ணைக் குளிரக் கலந்து’ என்கிறவித்தால் – சக்ஷு ப்ரீதி (தாரா மைத்ரீ) எனப்படுங் கண்கலவியைச் சொல்லுகிறதென்க.  கண்ணை என்பதில், ஐகாரத்தை அசையாகக் கொண்டு, கடிகமழ் பூங்குழலார்கள கண்குளிர்ச்சி அடைய உன் உடம்பு முழுதும் பொருந்தப் பார்த்து (உன்னோடு கலக்கும் படிகளை யெண்ண, அவர்களுடைய அந்த) எண்ணத்தின்படியே எப்போதும் அவர்களுக்கு போக்யனாயிருக்கும் பெருமானே’ என்று உரைத்தலும் ஏற்கும்.  பண்ணைக்கிழிய = பண் – செவ்வை, அது குலையும்படி ஸந்திபந்தங்கள் சிதறும்படி.

English Translation

O Padmanabha, Beautiful fragrant flower-coiffured dames look all over you with pleasant eyes and keep you in their hearts sweetly. O lord our ambrosia! You smote a cart to pieces. I will give you many fruits to eat. I will apply these pendants to your ears without the slightest pain, come hither.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top