(141)
வையமெல் லாம்பெறும் வார்கடல் வாழும் மகரக் குழைகொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன்நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்யஇவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடராயர்கொ ழுந்தே
மையன்மை செய்துஇள வாய்ச்சிய ருள்ளத்து மாதவ னேஇங்கே வாராய்.
பதவுரை
| உய்ய |
– |
(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி |
| இ ஆயர் குலத்தினில் தோன்றிய |
– |
இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த |
| ஒன் சுடர் |
– |
மிக்க ஒளியையுடைய |
| ஆயர் கொழுந்தே |
– |
இடையர்களின் கொழுந்து போன்றவனே! |
| வையம் எல்லாம் பெறும் |
– |
இந்தவுலகங்களையெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக்கூடிய |
| வார் கடல் வாழும் மகரம் குழை |
– |
பெரிய கடலிலே வாழ்கின்ற சுறாமீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை |
| கொண்டு வைத்தேன் |
– |
(உன்காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்; |
| (உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு) | ||
| வெய்யவே |
– |
வெம்மையுடனிருக்கும்படி |
| காதில் திரியை இடுவன் |
– |
(உன்) காதிலே திரியை இடுவேன்; |
| வேண்டியது எல்லாம் |
– |
நீ விரும்பிய பொருள்களை யெல்லாம் |
| தருவன் |
– |
கொடுப்பேன்; |
| மா தவனே |
– |
ச்ரியபதியே! |
| இன ஆய்ச்சியர் உள்ளத்து |
– |
மடமைப் பருவமுடைய இடைப்பெண்கள் மநிஸ்ஸலே |
| மையன்மை செய்து |
– |
வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு |
|
இங்கே வாராய்:-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – நீ இப்போது திரியையிட்டுக்கொண்டால் பின்பு பொற்கடிப்பு மாத்திரமல்ல மிகச்சிறந்த மகாகுண்டலங்களையும் அணியலாம்; காது தினவு தின்னாமலிருக்க வெப்பமாகவே திரியையிடுவேன்; உனக்கு வேண்டிய பணியாரங்களையும் பழங்களையும் தருவேன்; நீ வரவேணும் என்று சொல்லி யழைக்கிறாள். வெப்பு தினவுக்குப் பரிஹாரமாதலால் ‘வெய்யவே காதில் திரியையிடுவேன்’ என்றாள்.
English Translation
O Madhava! O Radiant child born to deliver this cowherd clan! I have brought for you these ear-pendants in the shape of the deep-sea Makara fish, which all the world raves about. You infatuate young cowherd-dames and live in their hearts. I shall bore your ears quickly. I will give you all that you ask for.
