(137)
ஓடவோடக் கிங்கிணிகள் ஒலிக்குமோசைப் பாணியாலே
பாடிப்பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன்
ஆடியாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தையாடி
ஓடியோடிப் போய்விடாதே உத்தமாநீ முலையுணாயே.
பதவுரை
| ஓடஓட |
– |
(குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால் |
| ஒலிக்கும் |
– |
சப்திக்கின்ற |
| கிண்கிணிகள் |
– |
பாதச் சதங்கைகளினுடைய |
| ஓசைப்பாணியாலே |
– |
ஓசையாகிற சப்தத்தால் |
| பாடிபாடி |
– |
இடைவிடாது பாடிக்கொண்டு |
| அதனுக்கு ஏற்ற கூத்தை |
– |
அப்பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை |
| அசைந்து அசைந்திட்டு |
– |
வலப்புறமாகவும் இடப்புறமாகவும் அசைந்து |
| ஆடி ஆடி |
– |
ஆடிக்கொண்டு |
| வருகின்றாயை |
– |
வருகின்ற உன்னை |
| பற்பநாபன் என்று இருந்தேன் |
– |
(வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணியிருந்தேன்; |
| நீ |
– |
நீ |
| ஆடி |
– |
ஆடிக்கொண்டே |
| ஓடிஓடிபோய் விடாதே |
– |
(என் கைக்கு எட்டாதபடி) ஓடிப்போய்விடாதே |
|
முலை உணாய். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணபிரான் நிடந்து வரும்போது திருவடிச் சதங்கைகளின் ஓசைதானே பாட்டாயிருக்குமென்க. (பற்பநாபனென்றிருந்தேன்) “கொப்பூழிலெழு கமலப்பூவழகர்” என்றபடி வேறொரு ஆபரணமும் வேண்டாமல் திருநாபீகமலமே ஆபரணமாம்படி யிருப்பானொருவனன்றோ இவன்! இவனுக்கு வேறொரு பாட்டும் கூத்தும் வேணுமோ? சதங்கையோசையும் நடையழகுமே பாட்டும் ஆட்டமுமாய் அமைந்த ஆச்சரியம் என்னே! என்று வியப்புக் கொண்டிருந்தேன் என்க. இனி – இவன் அழிந்து கிடந்த வுலகத்தை நாபீகமலத்தில் உண்டாக்கின வனன்றோ ஆகையால் நம்முடைய ஸத்தையையுந் தருகைக்காக வருகிறானென்றிருந்தேன் என்றும் விசேஷார்த்தம் கூறுவர்.
English Translation
O Perfect One! You go running everywhere, and over the din of the ankle bells, you sing songs, and to match the songs you dance and dance vigorously. When I saw you come thus I said to myself, “This is Padmanabha, the Lord himself”. Now do not go running away again, come and take suck.
