(138)

(138)

வாரணிந்த கொங்கையாய்ச்சி மாதவாஉண் ணென்றமாற்றம்

நீரணிந்த குவளைவாசம் நிகழநாறும் வில்லிபுத்தூர்

பாரணிந்த தொல்புகழான் பட்டர்பிரான் பாடல்வல்லார்

சீரணிந்த செங்கண்மால்மேல் சென்றசிந்தை பெறுவார்தாமே.

பதவுரை

வார் அணிந்த

கச்சை அணிந்து கொண்டிருக்கிற
கொங்கை

ஸ்தநங்களையுடைய
ஆய்ச்சி

யசோதை
மாதவா

மாதவனே!
உண்

முலையை (உண்பாயாக)
என்ற

என்று (வேண்டிச்) சொன்ன
மாற்றம்

வார்த்தையைக் குறித்தனவான
நீர் அணிந்த குவளை

நீர்நிலையை அழகுடையதாகச் செய்கிற    செங்கழுநீரின்
வாசம்

நல்லவாசனை
நிகழ நாறும்

ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
வில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும்
பார்  அணிந்த

பூமி முழுவதும் அழகாகப் பரவிய
தொல் புகழான்

பழமையான கீர்த்தியை யுடையவருமான
பட்டர்பிரான்

பெரியாழ்வார் அருளிச் செய்த
பாடல்

பாசுரங்களை
வல்லார்

ஓதவல்லவர்
சீர் அணிந்த

குணங்களாலழகிய
செம் கண் மால் மேல்

சிவந்த திருக்கண்களையுடைய திருமாலிடத்தில்
சென்ற

பதிந்த
சிந்தை

மநஸ்ஸை
பெறுவர்

அடைவார்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – வாரணிந்த கொங்கையாய்ச்சி – ராஜாக்களுக்கு போக்யமான பொருளை வேலைக்காரர் ­மூடிக்கொண்டு போவதுபோல கண்ணனுக்கு விருப்பமான ஸ்தநங்களை யசோதை பிறர் கண்படாதபடி கச்சினால் மறைத்து வைப்பாளென்க.  மாற்றம் (ஆகிய) பாடல் எனத்தொடரும்.  குவளை – ‘குவலம்’ என்ற வடசொல் விகாரம்; ‘குவலயம்’ என்பது மதுவே; “குவாலயம் குவலயம் குவாலம் குவலம் குவம்” என்பது – வடமொழி நிகண்டு.  வாசம் – ‘வாஸநா’ என்ற வடசொற் சிதைவு.  ‘நிகழ்நறும்’ என்ற பாடம் பொருந்தாது.

அடிவரவு – அரவணை வைத்த தந்தம் கஞ்சன் தீய மின் பெண்டிர் இருமலை அங்கமலம் ஓட வாரணி போய்.

English Translation

These songs of the world famous Pattarbiran of Srivilliputtur with the fragrance of water-lotus wafting everywhere recalls the corset-breasted Yasoda’s suckle call to Madhava.  Those who master I will acquire a mind that dwells on the auspicious lotus-eyed Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top