(136)

(136)

அங்கமலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்

செங்கமல முகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம் முற்றத்தூடே

அங்கமெல்லாம் புழுதியாக அளையவேண்டா அம்மவிம்ம

அங்கமரர்க் கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே.

பதவுரை

அம்ம

–

தலைவனே!

(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னையடைந்த)

அங்கு

–

அக்காலத்திலே
விம்ம

–

(அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு

–

(அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த

–

(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே

–

தேவாதிராஜனே!
அம் கமலம் போது அகத்தில்

–

அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால்போல்

–

அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்

–

செந்தாமரை மலர்போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப

–

வியர்த்துப்போக
இ முற்றத்தூடே

–

இந்த முற்றத்திலேயே
தீமை செய்து

–

தீம்பைச் செய்துகொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக

–

உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா

–

புழுதியளையாதே;
முலை உணாய்

–

முலையுண்ணவாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

புழுதியளையாமல் முலையுண்ண வாராய் என்கிறாள்.  செந்தாமரை போன்ற திருமுகத்திலே வியர்வைத் துளிகள் அரும்புதற்கு ஒரு அபூதோபமை கூறுகின்றார்.  முதலடியில் – தாமரைமலரில் முத்துக்கள் சிந்தியிருந்தாலொக்குமென்கிறார்.

English Translation

My Master! Do not play mischief and go all over the yard picking up dust, with sweat forming over your flower-like face like pearls of dew on a fresh lotus flower.  O king of gods, there in the Milky Ocean, You gave nectar to the gods.  Now come and take suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top