(134)

(134)

பெண்டிர்வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுதுமென்னு மாசையாலே

கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி

வண்டுலாம்பூங் குழலினார்உன் வாயமுதம் உண்ணவேண்டி

கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தாநீ முலையுணாயே.

பதவுரை

கண்டவர்கள்

–

(உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்

–

(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நன் ஒப்பாரை

–

உன்னைப்போன்ற குழந்தைகளை
பெறுதும்

–

பெறுவோம் (பெறவேணும்)
என்னும்

–

என்கிற
ஆசையாலே

–

ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்

–

(உன்னைவிட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்

–

வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ

–

புஷ்பங்களையணிந்த
குழலினார்

–

கூந்தலையுடையவர்கள்
கண் இணையால்

–

(தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி

–

(உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்

–

உன்னுடைய
வாய் அமுதம்

–

அதராம்ருதத்தை
உண்ண வேண்டி

–

பாநம்பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்

–

(உன்னை) எடுத்துக்கொண்டு போவதற்கு
வந்து நன்றார்

–

வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா

–

கோவிந்தனே!

நீ முலை உணாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – முதலிரண்டடியால் – பதிவிரதைகளான பெண்களின் மநோரதமும் பின் ஒன்றரையடியால் – யுவதிகளாய் போகமநுபவிக்க விரும்பின பெண்களுடய மநோரதமும் சொல்லுகிறதென்க.  அவற்றில் வேண்டினபடி ஆகிறது.  இப்போது நீ முலையுண்ண வரவேணுமென்கிறாள்.  பெண்டிர் = இர் – பலர்பல் விகுதி.  பெறுதும் – தன்மைப்பன்மை வினைமுற்று.  ஆஸா – வடசொல்.  கலக்க நோக்குதல் – ஒவ்வொரு அங்கத்தினுடையவும் ஸௌந்தர்யத்தை நோக்குதல்.

English Translation

Passing housewives stop when they see you, filled with a desire to beget a child like you.  Bee-humming flower-coiffured girls roll their eyes over you and come to take you, to drink the nectar from your lips.  O Govinda, come take suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top