(133)

(133)

மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு

இன்னிசைக் கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக்கண்டார்

என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்

என்னும்வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலையுணாயே.

பதவுரை

மின் அனைய

மின்னலையொத்த
நுண்

ஸூக்ஷ்மமான
இடையார்

இடையையுடைய பெண்களின்
விரிகுழல் மேல்

விரிந்த (பரந்த) கூந்தலின்மேல்
நுழைந்த

(தேனை உண்ணப்) புகுந்த
வண்டு

வண்டுகள்

(தேனையுண்டு களித்து)

இன் இசைக்கும்

இனிதாக ஆளத்திவைத்துப் பாடாநின்ற
வில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரிலே
இனிது

போக்யமாக
அமர்ந்தாய்

எழுந்தருளியிருப்பவனே!
உன்னை கண்டார்

உன்னைப்பார்த்தவர்
இவனை பெற்ற வயிறு உடையாள்

இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றையுடையவள்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ

என்ன தபஸ்ஸு பண்ணினாளோ!
என்னும்

என்று கொண்டாடிச் சொல்லுகிற
வார்த்தை

வார்த்தையை
எய்துவித்த

(எனக்கு) உண்டாக்கின
இருடீகேசா

ஹ்ருஷீகேசனே!

முலை உணாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(என்ன நோன்பித்யாதி) ரூபணசேஷ்டி தாதிகளாலே இப்படி லோகவிலக்ஷ்ணனாயுள்ள இப்பிள்ளையைப் பெற்றாளும் ஒருத்தியே! அவள்தான் பூர்வஜந்மத்தில் நோற்ற நோன்பு என்னோ!  என்று என்னைப் பலரும் கொண்டாடும்படி பிறந்தவனே! என்று யசோதை கண்ணனை தன்வசப்படுத்தமைக்காகப் புகழ்ந்து கூறுகிறபடி.  ஹ்ருஷீகேசன் – (ரூபகுணாதிகளாலே) ஸர்வேந்த்ரியங்களையும் கவருமவள்.

English Translation

O Lord Hrisikesa residing sweetly in Srivilliputtur! Bees hover over your coiffure flowers and hum sweetly.  People who see you wonder what penance your mother did you beget you.  Such is the credit you have earned for me.  Come take suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top