(122)

(122)

சேப்பூண்ட சாடு சிதறி திருடிநெய்க்கு

ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால்

சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று

ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

சேபூண்ட

–

எருதுகள் கட்டுதற்கு உரிய
காடு

–

சகடம்

(அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலேதன் திருவடியைத் தூக்கி அச்சகடத்தை)

சிதறி

–

உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு

–

நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி

–

களவுசெய்து
ஆப்பூண்டு

–

(உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு

(அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)

நந்தன் மனைவி

–

நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடைதாம்பால்

–

(தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளி துடிக்க துடிக்க

துடிக்க சோப்பூண்டு

–

அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு

(அதனோடு நல்லாமல்)

அன்று

–

அக்காலத்தில்
ஆப்பூண்டாள்

–

(எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்

அப்பூச்சி காட்டுகின்றான் ***

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சாடு – ‘சகடம்’  என்ற வடசொல்லின் சிதைவு.  ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால் சோப்பூண்டு – ‘என் மகன் மேல் வீண் பழிவிளைத்திடேல்மின்; களவுகண்டதுண்டாகில் கையும்பிடியுமாய்ப் பிடித்துக் கொணருங்கள்’ என்று சொல்லிய தாயான தன்முன்பே ஆய்ச்சிமார் கண்ணனைக் கொண்டியோடே கண்டுபிடித்துக் கொணர அதுகண்ட யசோதை ‘நான் பிள்ளை பெற்று வளர்க்கிறது மிகவு மழகியதாயிருந்தது! ‘ என்று சொல்லித் தன்னைத்தானே மோதிக்கொண்டு அவர்கள் முன்றே தன் வயிற்றெரிச்சலெல்லாந் தோன்றும் படி அடிக்க அடியுண்டு என்றபடி.  ஆப்பூண்டு சோப்பூண்டு ஆப்பூண்டான் – ‘ஆப்பூண்டு’ ‘சோப்புண்டு’ ஆப்பூண்டான் என்பவற்றின் நீட்டல் விகாரம்.

English Translation

Once he was caught stealing butter; Nanda’s wife tied up with a churning rope and beat him as he writhed in pain.  He smote a loaded bullock cart to smithers.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top