(119)

(119)

மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்

பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்

சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற செங்கண்

அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

மலைபுரை

–

மலையை ஒத்த
தோள்

–

தோள்களையுடைய
மன்னவர்

–

அரசர்களான
மாரதரும்

–

மஹாரதரும்
மற்றும் பலர்  உம்

–

மற்றும் பலவகை அரசர்களும்
குலைய

–

அழியவும்
நூற்றுவரும்

–

(துர்யோதநாதிகள்) நூறுபேரும்
பட்டு

–

மரணமடைந்து
அழிய

–

உருவமழிந்து போகவும்
பார்த்தன்

–

அர்ஜுனனுடைய
சிலை

–

(காண்டீவமென்னும்) வில்
வளைய

–

வளையவும்
திண் தேர் மேல்

–

(அந்த  அர்ஜுனனுடைய) வலிய தேரின்மேல்
முன் நன்ற

–

(ஸாரதியாய்) முன்புறத்தில் நன்ற
செம் கண்

–

(வாத்ஸல்யஸூசகமாகச்) சிவந்த கண்களையுடையனாய்
அலவலை

–

(அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்

வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – பருத்த வடிவத்திலும் ஒருவராலும் சலிப்பிக்க முடியாதபடி உறுதியாயிருத்தலிலும் தோளுக்கு மலை உவமை யென்க.  தேர்வீரர் – அதிரதர் மஹாரதர் ஸமரதர் அர்த்தாதர் என நால்வகைப்படுவராதலால் ‘மாரதரும் மற்றும்’ என்றார்.  (அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின்மேலிருந்து தமது ரதகஜதுரகபதாதிகளுக் கழிவுவாராமல் காத்துக்கொண்டு பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் – அதிரதம் என்றும கீழ்ச் சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் – மஹாரதர் என்றும் ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்க வல்லவர் – ஸமரதர் என்றும் அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் – அர்த்தரதர் என்றுஞ் சொல்லப்படுபவர். ) ‘மன்னவரும்’ என்ற விடத்திலுள்ள உம்மை ‘பலர்’ என்பதோடு கூட்டப்பட்டது.  மாரதர்  – ??? என்ற வடசொல் திரிபு.  பார்த்தன் – வடசொல்; ‘???’ (குந்தி) என்பவளுடைய மகன்.  அலவலை – அர்த்தத்தின் உயர்த்தியையும் கேட்பவனுடைய தாழ்வையும் பாராமல் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லுமவன்; வரம்பு கடந்து பேசுபவன்.  இப்படியெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணன் செய்தது – த்ரௌபதியின் விரித்த கூந்தலை முடிக்கும் பொருட்டாம்.

English Translation

The lotus-eyed Lord drove the chariot for Arjuna who wielded the bow and killed Duryodhana and his hundred brothers; kings with mountain-like arms, the great seer Bhishma, and a host of others trembled.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top