(113)

(113)

சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்

உத்தர வேதியில் நின்ற ஒருவனை

கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட

பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.

பதவுரை

உத்தரவேதியில் நின்ற

–

உத்தரவேதியிலிருந்த
ஒருவனை

–

(ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்

–

குடையை
ஏந்தி

–

(கையில்) பிடித்துக்கொண்டு
தனி

–

ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்

–

ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (ப்போய்)
கத்திரியர்

–

(அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள்
காண

–

பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்

–

உலகம் முழுவதையும்
கொண்ட

–

(நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்

–

விலக்ஷணமான
ஆகாரன்

–

வடிவையுடையனான இவன்

புறம்புல்குவான்-;

பார்

–

பூமியை
அளந்தான்

–

(திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்

என் புறம் புல்குவான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சத்திரம் – ?? என்ற வடசொல் திரிபு.  உத்தரவேதி – ஆஹா நீயாக்ஙக்கு வடதிசையிலே யாக்பசுவைக் கட்டுகின்ற  யூபஸ்தம்பத்தை காட்டியன் வேதிகை; இச்சொல் இங்கு யாகபூமியைக் காட்டுமென்க.  சத்திரியர் -க்ஷதிய என்ற வடசொற்ரிபு.  (‘சத்திரிவர்’ என்பது சிலர் பாடம்) பத்திராகாரன் –

English Translation

The Lord approached the sacrificial altar as a beautiful manikin with an umbrella in hand and all auspicious features; he measured and took the earth and all else from Bali, beheld by the assembled kings.  He will come and embrace me from behind.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top