(99)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.
பதவுரை
| பஞ்சவர் |
– |
பாண்டவர்களுக்காக |
| தூதன் ஆய் |
– |
(துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப்போய் |
|
(அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) |
||
| பாரதம் |
– |
பாரதயுத்தத்தை |
| கைசெய்து |
– |
அணிவகுத்துச்செய்து |
| நஞ்சு |
– |
விஷத்தை |
| உமிழ் |
– |
கக்குகின்ற |
| நாகம் |
– |
(கானிய) ஸர்ப்பம் |
| கிடந்த |
– |
இருந்த |
| நல்பொய்கை |
– |
கொடிய மடுவிலே |
| புக்கு |
– |
புகுந்து |
| அஞ்சு |
– |
(ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி |
| பணத்தின் மேல் |
– |
(அப்பாம்பின்) படத்திலே |
| பாய்ந்திட்டு |
– |
குதித்து |
|
(நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) |
||
| அருள்செய்த |
– |
(அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட |
|
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-; |
||
| ஆயர் |
– |
இடையர்களுக்கு |
| பெருமானே |
– |
தலைவனானவனே! |
|
அச்சோ அச்சோ-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – காளியனை அடக்கியது முன்னும் பாரதம்கை செய்தது அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம்முறையைக் கருதாமல் இங்ஙனமருளிச் செய்தாரென்க. ‘கைசெய்து’ என்றவிடத்து கை – தமிழ் உபஸர்க்கமென்பர். நல்பொய்கை – எதிர்மறையிலக்கணை (விபரீதலக்ஷணை) அஞ்ச – காளியன் அஞ்சும்படி எனினுமொக்கும்.
English Translation
O Dark-hued cowherd-Lord, you went as a messenger for the five Pandavas, then waged the great Bharata war. You entered the lake haunted by the venom-spitting serpent Kaliya and leapt on his hoods, struck terror, then graced him, come Acho, Acho!
