(98)
செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப
சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய
அங்கைக ளாலேவந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.
பதவுரை
| செங்கமலம் |
– |
செந்தாமரைப்பூவில் |
| தேன்உண்ணும் |
– |
தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற |
| வண்டேபோல் |
– |
வண்டுகளைப் போல |
| பங்கிகள் வந்து |
– |
(உனது) கூந்தல் மயிர்கள் வந்து |
| உன் பவளம் வாய் |
– |
பவளம்போற் செந்நிறமான உனதுவாயில் |
| மொய்ப்ப |
– |
மொய்த்துக்கொள்ளும்படி |
| வந்து |
– |
ஓடிவந்து |
| சங்கு |
– |
ஸ்ரீபாஞ்சஜக்யத்தையும் |
| வில் |
– |
ஸ்ரீசார்ங்கத்தையும் |
| வாள் |
– |
நந்தலத்தையும் |
| தண்டு |
– |
கௌமோதகியையும் |
| சக்கரம் |
– |
ஸூதர்சநாழ்வானையும் |
| ஏந்திய |
– |
(பூவேந்தினாற்போல) தரித்துக்கொண்டுள்ள |
| அம் கைகளாலே |
– |
அழகிய கைகளாலே |
|
அச்சோ அச்சோ |
||
| வந்து |
– |
ஓடிவந்து |
| ஆர தழுவா |
– |
திருப்தி உண்டாகும்படி நன்றாகத்தழுவி |
|
அச்சோ அச்சோ |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – ஓடி விளையாடும்போது வாரின கூந்தலும் கலைந்துவிடுமாதலால் அங்ஙனங்கலைந்து தொங்கும் கறுத்த மயிர்கள் செந்நிறமான வாயிற்படிதல் – செந்தாமரைப்பூவில் கருவண்டுகள் மொய்த்துக்கிடத்தலை ஒத்திருக்கு மென்க. பங்கி – ஆண்மயிர் “பங்கியே பிறமயிர்க்கும் பகருமாண் மயிர்க்கும் பேராம்” என்ற நிகண்டு காண்க. தழுவா = கீழ்பாட்டில் ‘வாரா’ என்றது போலக் கொள்க. இப்பாட்டில் இரண்டாமடியில் தளைதட்டாநின்றது; இவ்வாறே பாடங்காண்கிறது.
English Translation
Your dark curly locks hover around your coral-lips like bumble bees drinking nectar from a lotus; with tender hands that gracefully hold the conch, discus, mace, bow and dagger, come running to embrace me, Acho, Acho!
