(99)

(99)

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து

நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு

அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த

அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.

பதவுரை

பஞ்சவர்

–

பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்

–

(துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப்போய்

(அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்)

பாரதம்

–

பாரதயுத்தத்தை
கைசெய்து

–

அணிவகுத்துச்செய்து
நஞ்சு

–

விஷத்தை
உமிழ்

–

கக்குகின்ற
நாகம்

–

(கானிய) ஸர்ப்பம்
கிடந்த

–

இருந்த
நல்பொய்கை

–

கொடிய மடுவிலே
புக்கு

–

புகுந்து
அஞ்சு

–

(ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்

–

(அப்பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு

–

குதித்து

(நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)

அருள்செய்த

–

(அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட

அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;

ஆயர்

–

இடையர்களுக்கு
பெருமானே

–

தலைவனானவனே!

அச்சோ அச்சோ-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – காளியனை அடக்கியது முன்னும் பாரதம்கை செய்தது அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம்முறையைக் கருதாமல் இங்ஙனமருளிச் செய்தாரென்க.  ‘கைசெய்து’ என்றவிடத்து கை – தமிழ் உபஸர்க்கமென்பர்.  நல்பொய்கை – எதிர்மறையிலக்கணை (விபரீதலக்ஷணை) அஞ்ச – காளியன் அஞ்சும்படி எனினுமொக்கும்.

English Translation

O Dark-hued cowherd-Lord, you went as a messenger for the five Pandavas, then waged the great Bharata war.  You entered the lake haunted by the venom-spitting serpent Kaliya and leapt on his hoods, struck terror, then graced him, come Acho, Acho!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top