(98)

(98)

செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்

பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப

சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய

அங்கைக ளாலேவந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.

பதவுரை

செங்கமலம்

–

செந்தாமரைப்பூவில்
தேன்உண்ணும்

–

தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டேபோல்

–

வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து

–

(உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்

–

பவளம்போற் செந்நிறமான உனதுவாயில்
மொய்ப்ப

–

மொய்த்துக்கொள்ளும்படி
வந்து

–

ஓடிவந்து
சங்கு

–

ஸ்ரீபாஞ்சஜக்யத்தையும்
வில்

–

ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்

–

நந்தலத்தையும்
தண்டு

–

கௌமோதகியையும்
சக்கரம்

–

ஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய

–

(பூவேந்தினாற்போல) தரித்துக்கொண்டுள்ள
அம் கைகளாலே

–

அழகிய கைகளாலே

அச்சோ அச்சோ

வந்து

–

ஓடிவந்து
ஆர தழுவா

–

திருப்தி உண்டாகும்படி நன்றாகத்தழுவி

அச்சோ அச்சோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ஓடி விளையாடும்போது வாரின கூந்தலும் கலைந்துவிடுமாதலால் அங்ஙனங்கலைந்து தொங்கும் கறுத்த மயிர்கள் செந்நிறமான வாயிற்படிதல் – செந்தாமரைப்பூவில் கருவண்டுகள் மொய்த்துக்கிடத்தலை ஒத்திருக்கு மென்க.  பங்கி – ஆண்மயிர் “பங்கியே பிறமயிர்க்கும் பகருமாண் மயிர்க்கும் பேராம்” என்ற நிகண்டு காண்க.  தழுவா = கீழ்பாட்டில் ‘வாரா’ என்றது போலக் கொள்க.  இப்பாட்டில் இரண்டாமடியில் தளைதட்டாநின்றது;  இவ்வாறே பாடங்காண்கிறது.

English Translation

Your dark curly locks hover around your coral-lips  like bumble bees drinking nectar from a lotus; with tender hands that gracefully hold the conch, discus, mace, bow and dagger, come running to embrace me, Acho, Acho!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top