(94)

(94)

வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின்

கருங்கன்றுபோல் தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன்

சிறுபுகர் படவியர்த்து ஒண்போதலர் கமலச் சிறுக்கா லுரைத்து

ஒன்றும் நோவாமே தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.

பதவுரை

திரிவிக்கிரமன்

–

(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி

–

வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு

–

மேலே போகட்டுக்கொண்டு
அளைந்தது

–

அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்

–

ஒரு கரிய குட்டியானை போல,
தெள் புழுதி

–

தெளிவான புழுதியிலே
ஆடி

–

விளையாடி
சிறு புகர் பட

–

சிறிது காந்தி உண்டாக வேர்த்துப்போய்,
வியர்த்து

–

வேர்த்துப்போய்,
போது

–

உரியகாலத்திலே
அலர்

–

மலர்ந்த
ஒள்

–

அழகிய
கமலம்

–

தாமரைப்பூவை ஒத்த
சிறு கால்

–

சிறியபாதங்கள்
உறைத்து

–

(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே

–

சிறிதும் நோவாதபடி
தண்போது கொண்ட

–

குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது

–

மெத்தையின்மேலே
தளர்நடை நடவானோ-.

–

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-பரந்த திருவடிகளைக் கொண்டு உலக மூன்றையுமளந்த இவன் தனது சிறிய அடிகளைக்கொண்டு புஷ்ப மெத்தையின்மேல் காலுறுத்தாமல் மெல்ல நடக்கவேணும் என்கிறார்.  கருநிறமான கண்ணன் திருமேனியிற்படிந்த புழுதியில் வேர்வைநீர் அழகியதாய்க் காணப்படுதலால், ‘புழுதியாடிச் சிறு புகர்பட வியர்த்து’ எனப் பாராட்டிக் கூறினார்.  உரைத்து-உறைக்க; எச்சத்திரிபு.  வெண்புழுதி, தெண்புழுதி, ஒண்போது, தண்போது-பண்புத்தொகை.

English Translation

Like a baby elephant playing in white mud, Trivikrama playing in the dirt comes sweating in patches; lets he hurt his tender lotus feet when he steps on hard ground, may he come toddling on a bed of fresh blossoms.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top