(94)
வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின்
கருங்கன்றுபோல் தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன்
சிறுபுகர் படவியர்த்து ஒண்போதலர் கமலச் சிறுக்கா லுரைத்து
ஒன்றும் நோவாமே தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.
பதவுரை
| திரிவிக்கிரமன் |
– |
(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன் |
| வெள் புழுதி |
– |
வெளுத்த புழுதியை |
| மேல் பெய்து கொண்டு |
– |
மேலே போகட்டுக்கொண்டு |
| அளைந்தது |
– |
அளைந்ததாகிய |
| ஓர் வேழத்தின் கரு கன்று போல் |
– |
ஒரு கரிய குட்டியானை போல, |
| தெள் புழுதி |
– |
தெளிவான புழுதியிலே |
| ஆடி |
– |
விளையாடி |
| சிறு புகர் பட |
– |
சிறிது காந்தி உண்டாக வேர்த்துப்போய், |
| வியர்த்து |
– |
வேர்த்துப்போய், |
| போது |
– |
உரியகாலத்திலே |
| அலர் |
– |
மலர்ந்த |
| ஒள் |
– |
அழகிய |
| கமலம் |
– |
தாமரைப்பூவை ஒத்த |
| சிறு கால் |
– |
சிறியபாதங்கள் |
| உறைத்து |
– |
(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்) |
| ஒன்றும் நோவாமே |
– |
சிறிதும் நோவாதபடி |
| தண்போது கொண்ட |
– |
குளிர்ந்த புஷ்பங்களுடைய |
| தவிசின் மீது |
– |
மெத்தையின்மேலே |
| தளர்நடை நடவானோ-. |
– |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-பரந்த திருவடிகளைக் கொண்டு உலக மூன்றையுமளந்த இவன் தனது சிறிய அடிகளைக்கொண்டு புஷ்ப மெத்தையின்மேல் காலுறுத்தாமல் மெல்ல நடக்கவேணும் என்கிறார். கருநிறமான கண்ணன் திருமேனியிற்படிந்த புழுதியில் வேர்வைநீர் அழகியதாய்க் காணப்படுதலால், ‘புழுதியாடிச் சிறு புகர்பட வியர்த்து’ எனப் பாராட்டிக் கூறினார். உரைத்து-உறைக்க; எச்சத்திரிபு. வெண்புழுதி, தெண்புழுதி, ஒண்போது, தண்போது-பண்புத்தொகை.
English Translation
Like a baby elephant playing in white mud, Trivikrama playing in the dirt comes sweating in patches; lets he hurt his tender lotus feet when he steps on hard ground, may he come toddling on a bed of fresh blossoms.
