(95)

(95)

திரைநீர்ச் சந்திர மண்ட லம்போல் செங்கண்மால் கேசவன்தன்

திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர

பெருநீர்த் திரையெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்தபலம்

தருநீர் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ.

பதவுரை

செம் கண் மால்

சிவந்த கண்களையும் கருநிறத்தையுமுடைய
கேசவன்

கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்

அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில்

(அசைந்து தோன்றுகிற)

சந்திரன் மண்டலம் போல்

ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப்போல
தன் –

தன்னுடைய
திரு நீர்

அழகிய ஒளியையுடைய
முகத்து

திருமுகத்திலே
துலங்கு

விளங்குகின்ற
சுட்டி

சுட்டியானது
எங்கும்

எல்லாவிடத்திலும்
திழ்ந்து

ப்ரகாசித்துக்கொண்டு
புடை பெயர்

இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்

சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்

அலையெறிகிற கங்கையிற்காட்டிலும்
பெரியது

அதிகமான
ஓர்

ஒப்பற்ற
தீர்த்த பலம்

தீர்த்த பலத்தை
தரும்

கொடுக்கின்ற
நீர்

ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்

சிறிய சண்ணமானது
துள்ளம் சோர்

துளிதுளியாகச்சொட்டவும்

தளர்நடை நடவானோ-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெற்றியில் தொங்குகின்ற சுட்டி அசையவும், குறியில் நின்றும் மூத்திரநீர் துளிதுளியாகச் சிந்தவும் தளர்நடை நடந்து வரவேணு மென்கை.  கருநிறத்தனான கண்ணனது திருநெற்றியி லசைந்துகொண்டு விளங்குஞ் சுட்டிக்கு, கருநிறமான கடலின் நடுவில் அசைந்துகொண்டு தோன்றும் சந்த்ர ப்ரதிபிம்பம் ஏற்ற உவமையாம்.  சண்ணம்-ஆண்குறி.  . . .  . . . (க)

English Translation

The ornament on lotus-eyed kesava’s forehead sways flashing like a full moon reflected on dark waters.  Holier then the hushing water of the great river Ganga is the piss that flows from his little penis.  With droplets dripping, is he going to come toddling now?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top