(87)

(87)

செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல

நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக

அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.

பதவுரை

செக்கரிடை

செவ்வானத்திலே
நுனி கொம்பில்

கொம்பின் நுனியிலே
தோன்றும்

காணப்படுகிற
சிறுபிறை முளை போல

சிறிய பிறைச்சந்திரனாகிய முளையைப்போல,
நக்க

சிரித்த
செம் அவர் வாய்

மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது

மேட்டிடத்தில்
நளிர்வெண்பல் முளை

குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக

விளங்க
அஃகுவடம்

சங்குமணி வடத்தை
உடுத்து

(திருவரையில்) தரித்த
ஆமைத்தாலி

ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட

கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்தசயனன்

திருவனந்தாழ்வான்மேலே படுப்பவனும்
தக்க மா மணிவண்ணன்

தகுதியான நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்

வஸுதேவ புத்திரனுமான இவன்

தளர்நடை நடவானோ .

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – புன்முறுவல் செய்துகொண்டே தளர்நடை நடக்கவேணுமென்று இதனால் பிரார்த்திக்கிறபடி, கண்ணபிரானது மிகவுஞ் சிவந்த வாயாகிய மேட்டிடத்தில் வெளுத்த  பல்லின் முளைகள் பிரகாசிப்பதானது – செவ்வானத்தில் தோன்றுகின்ற குளிர்ந்த வெள்ளிய சிறு பிறைபோல இருக்குமென்க.  ‘நக்க‘ என்றது வாய்க்கு விசேஷணம்.  “வெண்பல் முளையிலகத் தளர்நடை நடவானோ” என்று அந்வயம்.  ‘சந்திரன் எங்கே இருக்கிறான்‘ என்றால், ‘அந்த மரக்கிளைக்கு மேலிருக்கிறான்‘ என்று உலகவழக்கிற் காட்டவேண்டி யிருப்பதனால், ‘நுனிக் கொம்பில் தோன்றுஞ் சிறுபிறை முளை‘ என்றார்.  இங்ஙனம் அறியும் அறிவு – ?????? மெனப்படும்.  சிறுபிறை முளையென்றது மூன்றாம் பிறையை யென்பர்.  மாமணி – நீலாத்நம், மா – கறுப்புக்கும் பெயர்.

English Translation

With a conch strung around the waist, and a tortoise-talisman around the neck, the eternally sleeping Lord Vasudeva of dark gem-hue reveals a smile of pearl-white teeth and lips like a thin crescent moon in the red evening sky.  Is the going to come toddling now?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top