(83)

(83)

அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே

வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்

உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்

பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி.

பதவுரை

அளந்திட்ட

–

(தானே) அளந்துகட்டின
தூணை

–

கம்பத்தை
அவன்

–

அந்த ஹிரண்யாஸுரன் (தானே)
தட்ட

–

புடைக்க
ஆங்கே

–

(அவன் புடைத்த) அந்த இடத்திலேயே
வான் உகிர்

–

கூர்மையான நகங்களையுடைய
சிங்கம் உருஆய்

–

நரஸிம்ஹ ­மூர்த்தியாய்
வளர்ந்திட்டு

–

வளர்ந்த வடிவத்துடன் தோன்றி

(ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று)

உளம்

–

(அவ்விரணியனது) மநஸ்ஸு
தொட்டு

–

பரிசோதித்துப் பார்த்து (பின்பு)
இரணியன்

–

அவ்விரணியனுடைய
ஒளி

–

ஒளி பொருந்திய
மார்பு அகலம்

–

மார்பின் பரப்படங்கலும்
பிளந்திட்ட

–

(நகத்தாற்) பிளந்த

கைகளால் சப்பாணி

பேய்

–

பேய்மகவான பூதனையின்
முலை

–

முலையை
உண்டானே

–

உண்டவனே!

சப்பாணி-;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – அளந்திட்ட தூணாவது – முன்பே நரசிங்க­மூர்த்தியை உள்ளே வைத்துக்கட்டிய தூண் என்று சொல்லமுடியாதபடி தானே தனக்குப் பொருந்தப் பார்த்துக் கட்டினது.  தூண் – ‘ஹூணா’ என்ற வடசொல் விகாரம்.  அவன் தட்ட – கையிலே நரசிங்கத்தை அடக்கி வைத்துக்கொண்டு வந்து பாய்ச்சினார்கள் என்றுவொண்ணாதபடி தானே அழன்று புடைக்கவென்கை.  உளம் – உள்ளம் என்பதன் தொகுத்தல்.  ஒன்மார்பென்ற – நரஸிம்ஹத்தினுடைய கோபாக்னியாலும் தன் வயிற்றிலுள்ள பயாக்கியாலும் பிறந்த பரிதாபத்தாலே பொன்மயமான மார்பு உருகி ஒளிவிட்டு உகிரால் எளிதாகக் கிழிக்கும்படியாயிற்றென்ற கருத்தைக் காட்டும்.  மார்பு அகலம் – அகலமான மார்பு என்றுமாம்.

English Translation

These are the hands that tore into the wide chest of Hiranya Kasipu,–you appeared as a fierce lion with sword-sharp claws and struck terror in his heart,–when he pointed at a pillar and smote it.  Clap Chappani.  O Lord, you sucked the ogress’s breast, clap Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top