(82)

(82)

குரக்கினத் தாலே குரைகடல் தன்னை

நெருக்கி அணைகட்டி நீள்நீ ரிலங்கை

அரக்கர் அவிய அடுகணை யாலே

நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.

பதவுரை

குரை

–

கோக்ஷியா நின்ற
கடல் தன்னை

–

ஸமுத்ரத்தை
நெருக்கி

–

(இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு

–

குரங்குகளினுடைய
இனத்தாலே

–

கூட்டங்களைக் கொண்டு
அணைகட்டி

–

ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்

–

பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை

–

லங்கையிலுள்ள
அரக்கர்

–

ராக்ஷஸர்களெல்லாம்
அலிய

–

அழிந்துபோம்படி
அடு கணையாலே

–

கொல்லும் தன்மையையுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய

–

நெருங்கப் போர் செய்த

கைகளால் சப்பாணி-;

வேலி

–

திருவாழி ஆழ்வானை
அம் கையனே

–

அழகிய கையிலேந்தினவனே!

சப்பாணி-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – வாநரப்படைகளைத் துணைகொண்டு கடலில் ஸேதுகட்டின கைகளாலே சப்பாணி கொட்டவேணுமென்கிறாள்.  குரங்கு + இனம் = குரக்கினம்;  வேற்றுமைப் புணர்ச்சியில் மென்றொடர் வன்றொடராயிற்று; “மென்றொடர் மொழியுட் சில வேற்றுமையில் தம்மினவன்றொடர்” என்னுஞ் சூத்திரவிதி அறிக.  குரைகடல் – வினைத்தொகை.  நீர் – கடலுக்கு ஆகுபெயர்.  அரக்கர் – ‘ரக்ஷ: ’ என்ற வடசொல் திரிபு.

English Translation

These are the hands rained arrows and destroyed the Rakshasas of Lanka, after building a bridge across the ocean strait with a monkey army.  Clap Chappani.  O, Lord who wields the discus, clap Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top