(72)

(72)

பாலொடு நெய்தயிர்ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர

கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக

நீல நிறத்தழகா ரைம்படை யின்நடுவே நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ

ஏலு மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.

பதவுரை

மறை

வேதத்தினுடைய
ஏலும்

தகுதியான
பொருளே

அர்த்தமானவனே!
பாலொடு

பாலோடேகூட
நெய்

நெய்யும்
தயிர்

தயிரும்
ஒண்சாந்தொடு

அழகிய சந்தநமும்
செண்பகமும்

செண்பகம் முதலிய மலர்களும்
பங்கயம்

தாமரைப்பூவும்
நல்ல

உத்தமமான
கருப்பூரமும்

பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை
நாறி வர

கலந்து பரிமளிக்க
கோலம்

அழகிய
நறு பவளம்

நற்பவளம்போல்
செம்

அழகியதாய்
துவர்

சிவந்திருக்கிற
வாயின் இடை

திருவதரத்தினுள்ளே
கோமளம்

இளையதான
வெள்ளி முளைபோல்

வெள்ளி முளைபோலே
சில பல்

சில திருமுத்துக்கள்
இலக

விளங்க
நீலம் நிறத்து

நீல நிறத்தையுடைத்தாய்
அழகு ஆர்

அழகு நிறைந்திரா நின்ற
ஐம்படையின் நடுவே

பஞ்சாயுதத்தின் நடுவே
நின்

உன்னுடைய
கனி

கொவ்வைக்கனி போன்ற
வாய்

அதரத்தில் ஊறுகின்ற
அமுதம்

அம்ருதஜலமானது
இற்று முறிந்து விழ

இற்றிற்று விழ

ஆடுக-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரான் நெய் பால் தயிர் முதலியவற்றைப் பலகாலும் அமுது செய்வதாலும், சந்தனம் செண்பகம் முதலியவற்றைப் பலகாலும் திருமேனியிலே சாத்திக்கொள்வதனாலும் செங்கீரையாடும்போது அவைகள் நல்ல பரிமளம் கமழ நிற்கும்.  அப்படிச் செங்கீரையாடுகையில் வாயைத்திறந்து சிறிது சிரிக்கும்போது “கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்” என்றபடி இயற்கையாகவே தாமரைப்பூ பச்சைக் கற்பூரங்களின் நறுமணமுடைய திருப்பவளத்தின் பரிமளமும் வீசும்; வாயினுள்ளே வௌவியரும்புகள் போன்ற சிலபற்கள் பிரகாசிக்கும்; திருமார்விலணிந்த ஆபரணங்களின்மேல் வாயிலூறுகிற அம்ருதஜலம் இற்றிற்றுவிழும்.  இப்படிப்பட்ட நிலைமைகளுடனே செங்கீரையாடவேணு மென்றதாயிற்று.

English Translation

With the smell of milk, curds and Ghee, mixing with the fragrance of Sandal paste, Comphor, Senpakam, and lotus flowers, a mouth lined by thin coral lips displaying a few tender teeth, set on a dark face lined by a string of charms, O Lord, dance! Dance the Senkirai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top