(73)

(73)

செங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும்அரையில்

தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும்

மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக

எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.

பதவுரை

எங்கள் குடிக்கு

எங்கள் வம்சத்துக்கு
அரசே

ராஜாவானவனே!
செம் கமலம்

செந்தாமரைப் பூப்போன்ற
கழலில்

திருவடிகளில்
சிறு இதழ்போல்

(அந்தப் பூவினுடைய) உள்ளிதழ்போலே சிறுத்திருக்கிற
விரலில்

திருவிரல்களில்
சேர்திகழ்

சேர்ந்து விளங்காநின்ற
ஆழிகளும்

திருவாழி மோதிரங்களும்
கிண்கிணியும்

சதங்கைகளும்
அரையில் தங்கிய

அரையில் சாத்தியிருந்த
பொன்வடமும்

பொன் அரைநாணும்
(பொன்) தான

பொன்னால் செய்த காம்பையுடைய
நல்

நல்லதான
மாதுளையின் பூவொடு

மாதுளம்பூக் கோவையும்
பொன்மணியும்

(நடுநடுவே கலந்து கோத்த) பொன்மணிக் கோவையும்
மோதிரமும்

திருக்கை மோதிரங்களும்
சிறியும்

(மணிக்கட்டில் சாத்தின) சிறுப்பவளவடமும்
மங்கலம்

மங்களாவஹமான
ஐம்படையும்

பஞ்சாயுதமும்
தோள் வளையும்

திருத்தோள் வளைகளும்
குழையும்

காதணிகளும்
மகரமும்

மகர குண்டலங்களும்
வாளிகளும்

(திருச்செவி மடல்மேல் சாத்தின) வாளிகளும்
சுட்டியும்

திருநெற்றிச் சுட்டியும்
ஒத்து

அமைந்து
இலக

விளங்கும்படி

ஆடுக. . .  ஆடுக. –.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரான் திருமேனியிலணிந்துள்ள திவ்யாபரணங்களை வாயாரப் பேசி அனுபவிக்கிறார்.  செங்கீரையாடும்போது ஆபரணங்கள் எல்லாம் அசையுமாதலால் இவ்வாறு அருளிச்செய்தனர்.  செந்தாமரைப்பூவில் சிறிய இதழ்கள் தோன்றுவதுபோல்  திருவடிகளில் சிறுவிரல்கள் தோன்றுகின்றன என்பது செங்கமலக்கழலில் சிற்றிதழ் போல் விரலில் என்றதன் கருத்து.  கிண்கிணி – அரைச்சதங்கையுமாகலாம் பாதச் சலங்கையுமாகலாம்.

English Translation

Wearing a matched set of rings on toes that look like petals on feet of lotuses; bells befitting the ankles; a golden waist-tread with pears and beads alternating; rings on fingers and a bracelet for the wrist; a necklace of charms shaped like the five weapons; shoulder rings, Makara-shaped ear pendants and a forehead-jewel, O, King and Master, dance! Dance the Senkirai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top