(51)

(51)

கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை

உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ

அச்சுத னுக்கென்று அவனியாள் போத்தந்தாள்

நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராய ணாஅழேல் தாலேலோ!!

பதவுரை

கச்சொடு

–

கச்சுப்பட்டையையும்
பொன்

–

பொன்னாற்செய்த
சுரிகை

–

உடைவாளையும்
காம்பு

–

கரைகட்டிய சேலையையும்
கனம்

–

கநகமயமான
வளை

–

தோள்வளைகளையும்
மணி

–

ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய்
உச்சி

–

உச்சியிலே சாத்தத்தக்கதான
சுட்டி

–

சுட்டியையும்
ஒள் தாள்

–

அழகிய காம்புகளையுடைத்தாய்
நிரை

–

ஒழுங்கான
பொற்பூ

–

பொற்பூவையும்
அச்சுதனுக்கு என்று

–

‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று
அவனியாள்

–

பூமிப்பிராட்டியானவள்
போத்தந்தாள்

–

அனுப்பினாள்;
நஞ்சு

–

விஷமேற்றின
முலை

–

பூதனையின் முலையின் பாலை
உண்டாய்

–

உண்ட கண்ணனே!

தாலேலோ;

நாராயணா! அழேல்! தாலேலோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ஸ்ரீ பூமிப்பிராட்டியார் சில ஆபரணங்களையும் ஆடையையும் கொடுத்தனுப்பினதைச் சொல்லித் தாலாட்டுகிறாள்.  அச்சுதனுக்கு என்றது முன்னிலைப் படர்க்கை;  அச்சுதனானவுனக்கு என்றவாறு.  அவநி- வடசொல்; பூமி.  ’ஷூரிகா’ என்ற வடசொல் சுரிகையெனத் திரிந்தது; கத்தி. . . .

English Translation

Goddess Earth has sent a golden diaper pin, golden bangles, a jewel-studded forehead pendant, and a hairpin with flowers of gold marked, ‘For Achyuta’.  O, Child who sucked the poisoned breast, Talelo.  Narayana, don’t cry, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top